பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக மக்களின் நெஞ்சங்களை கவர்ந்த விஜே சித்ரா இன்று அதிகாலை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்ராவின் தாயார் மகள் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: வி.ஜே.சித்ரா கன்னத்திலும் அந்த இடத்திலும் ரத்த காயம் வந்தது எப்படி..? பரபரக்கும் விசாரணை..!
 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஹேம்நாத் என்பவருடன் சித்ராவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி மாதம் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஹேமத்துக்கும் - சித்ராவிற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தின் போது...  ஷூட்டிங்கிற்காக நாசரத்பேட்டை ஓட்டலில் தங்கிய சித்ராவுடன் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியுள்ளார். பின்னர் சித்ரா குளிக்கச் செல்வதால் ஹேமந்தை வெளியே அனுப்பியதாகவும், அதன் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் கன்னத்திலும்,தாவகட்டியிலும் எப்படி ரத்த காயம் வந்தது என்கிற சந்தேகம் ஒரு புறம் நீடித்து வருகிறது.

மேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: கடைசி போட்டோ ஷூட்டில் கூட கலகலப்பாக சிரித்துக்கொண்டிருந்த சித்ரா..! கண்ணை விட்டு நீங்காத புன்னகை..!
 

மேலும் செய்திகள்: சித்ராவிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதா..? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்..!
 

இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள சித்ராவின் தாயார், தனது மகள் தற்கொலையில் சந்தேகம் உள்ளது, எனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர்...  எனவே போலீசார் இதுகுறித்து விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.