Jana Nayagan Oru Pere Varalaaru YouTube Record : ஒரு பேரு வரலாறு என்னும் பாடல் தற்போது வரலாறை முறியடித்தது ரசிகர்கள் மனதில் youtube இல் ஒரு மில்லியன் வியூவர்ஸ் ஐ தொட்டது.
தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் ஜன நாயகன் இரண்டாவது பாடல் தற்போது YouTubeல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியன் வியூஸ் பெற்று புதிய சாதனை படைத்த்து. ஜனநாயகத்தின் இரண்டாவது பாடல் மாலை 6:30 மணி அளவில் வெளியானத நிலையில் 7.30 மணி அதாவது ஒரு மணி நேரத்தில் youtubeல் ஒரு மில்லியன் வியூவர்ஸ்ஐ தொட்டு ஒரு பேரை வரலாறு மெகா சாதனை புரிந்தது. தளபதி விஜயின் கடைசி திரைப்படமான இந்த திரைப்படம் அரசியலுக்கு வருவதற்கு முன் ஒரு சாம்ராஜ்யத்தை தமிழ்நாட்டில் விதைப்பதற்காகவும் எடுக்கப்பட்ட அரசியல் படமாகவே இது கருதப்படுகிறது.
ஒரு பேரு வரலாறு என்னும் பாடலை எழுதியவர் விவேக். இதில் உள்ள ஒவ்வொரு பாடல் வரிகளும் ராசியின் அரசியலுக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது. தமிழ்நாடு ரசிகர்களின் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இந்த பாட்டை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு கமெண்ட்களும் நாடி நரம்பு எல்லாம் விஜயின் வெறித்தனமான ரசிகர்களால் மட்டுமே இந்த மாதிரி கமெண்ட்கள் எழுத முடியும் என்று கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் விஜய்யின் சினிமா வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடிய படமாகவும், விஜய்யின் அரசியல் பயணத்திற்கான முக்கியமான ஒரு படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் ரூ.1000 கோடி வசூல் குவிக்கவில்லை. ஆனால், தளபதி விஜய்யின் இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற மகத்தான சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் திரைக்கு வந்த நந்தமுரி பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் பலர் நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பேரே வரலாறு என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யை விமர்சிப்பவர்களுக்கும், அவரை எதிர்ப்பவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. அப்படி என்ன இந்த பாடலில் ஸ்பெஷல் என்றால் ஒவ்வொரு வரிகளும் விஜய்யின் அரசியல் வருகையை பிரதிபலிக்கும் வகையிலும் மக்களிடையே உங்களுக்காக நான் வருகிறேன் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன் தானே ஜன நாயகன். நம் மக்கள் நினைக்காமல் ஒரு மாற்றம் பிறக்காது. தல வந்தால் தரமானவன். உன் பேரைக் கேட்டால் உடல் உறைஞ்சே போகும். விழி திரையில் பார்த்தால் மனம் கரைஞ்சே போகும் என்று பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக களத்தில் இவன் இருக்கும் வரையில் இருக்கும் பயமே என்ற வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது விஜய்யின் அரசியல் களத்தை சுட்டிக்காட்டுகிறது. இப்படியெல்லாம் பாடல் வரிகள் இருக்கும் நிலையில் அவரது டான்ஸ் இன்னும் கூடுதலாக பாடலுக்கும் சரி, படத்திற்கும் சரி பலம் சேர்த்துள்ளது. இந்தப் பாடலில் அவரது அதிரடி டான்ஸ் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாகவே விஜய் டான்ஸில் கில்லி தான். அதுவும் இது அவரது கடைசி படம். அப்போ சொல்லவா வேணும்.
பயங்கரமாக பட்டைய கிளப்ப ஆடி அசத்த வைத்திருக்கிறார். சேகர் மாஸ்டர் தான் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஸ்டெப் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதே போன்று சுதன் மாஸ்டரும் பணியாற்றியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு விவேக் பாடல் வரிகள் எழுதிக் கொடுக்க விஷால் மிஸ்ரா மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பாடல் பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு பல்லவி சிங் தான் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
