MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இக்கட்டான சூழலில் எம்.ஜி.ஆருக்கு உதவி செய்த சிவாஜி..! இறுதிவரை நன்றி சொல்லி வந்த மக்கள் திலகம்..!

இக்கட்டான சூழலில் எம்.ஜி.ஆருக்கு உதவி செய்த சிவாஜி..! இறுதிவரை நன்றி சொல்லி வந்த மக்கள் திலகம்..!

பட வாய்ப்புகள் குறைந்திருந்த எம்.ஜி.ஆருக்கு, உச்சத்தில் இருந்த சிவாஜி கணேசன் பட வாய்ப்பை சிபாரிசு செய்தார். கருணாநிதியின் வசனத்துடன் உருவான இப்படம், எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்து.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 22 2026, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நட்புன்னா என்ன தெரியுமா? நண்பேன்னா என்ன தெரியுமா?
Image Credit : Asianet News

நட்புன்னா என்ன தெரியுமா? நண்பேன்னா என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் - சிவாஜி என்ற இரு துருவங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், திரைக்குப் பின்னால் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு மற்றும் ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உதவிகள் இன்றும் பலருக்கு ஆச்சரியத்தை அளிப்பவை. குறிப்பாக, எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த 'மலைக்கள்ளன்' திரைப்படம் உருவான விதம், இவர்களின் நட்புக்கு ஒரு சிறந்த சான்று.

26
வாய்ப்புகள் குறைந்திருந்த காலம்
Image Credit : Google

வாய்ப்புகள் குறைந்திருந்த காலம்

1950-களின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் சில படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு ஒரு மிகப்பெரிய 'பிரேக்' கிடைக்காமல் இருந்தது. பட வாய்ப்புகள் குறைந்து, ஒருவித இக்கட்டான சூழலில் அவர் இருந்த தருணம் அது. மறுபுறம், 'பராசக்தி'க்குப் பிறகு சிவாஜி கணேசன் அசுர வேகத்தில் வளர்ந்து, ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

Related Articles

Related image1
சிவாஜி, கமலுக்கு முன்பே நிகழ்த்தப்பட்ட சாதனை.! நடிப்பில் மாஸ் காட்டிய எம்.என்.நம்பியார்!
Related image2
சிவாஜி கணேசனையே அழ வைத்த கண்ணதாசன் பாடல்.! ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணீர் விட்டு கதறிய நடிகர் திலகம்.!
36
ஸ்ரீராமுலு நாயுடுவின் தேடல்
Image Credit : Asianet News

ஸ்ரீராமுலு நாயுடுவின் தேடல்

நாமக்கல் கவிஞரின் புகழ்பெற்ற நாவலான 'மலைக்கள்ளன்' கதையைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்த தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு, முதலில் அணுகியது சிவாஜி கணேசனைத்தான். அப்போது சிவாஜி உச்சகட்ட பிஸியில் இருந்தார். மேலும், படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் உள்ள பக்ஷிராஜ் ஸ்டூடியோவில் நடக்கவிருந்தது.

சிவாஜி நினைத்திருந்தால் அந்தப் படத்தை தன் கைவசம் வைத்திருக்க முடியும். ஆனால், தன் சக நடிகரின் நிலையை உணர்ந்த அவர், "அண்ணே, நான் இப்போ பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். என்னால் கோவை வந்து தங்கி நடிக்க முடியாது. இந்த வாய்ப்பை ஏன் எம்.ஜி.ஆர் அண்ணனுக்கு கொடுக்கக்கூடாது? அவர் இதற்குப் பொருத்தமாக இருப்பார்," என்று பெருந்தன்மையுடன் சிபாரிசு செய்தார்.

46
நண்பருக்காக களம் இறங்கிய கலைஞர்
Image Credit : Google

நண்பருக்காக களம் இறங்கிய கலைஞர்

படம் எம்.ஜி.ஆருக்கு வந்தாலும், "கருணாநிதி வசனம் எழுதினால் மட்டுமே படம் எடுப்பேன்" எனத் தயாரிப்பாளர் பிடிவாதம் பிடித்தார். கொள்கை ரீதியான சில தயக்கங்களால் கருணாநிதி மறுத்தபோது, எம்.ஜி.ஆர் அவரிடம் நேரில் சென்று, "எனக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை, என் வாழ்வாதாரத்திற்காக இதை நீ செய்துதான் ஆகவேண்டும்" என்று உருக்கமாகக் கேட்டார். நண்பனின் இக்கட்டான நிலையை உணர்ந்த கருணாநிதி, உடனடியாகச் சம்மதித்தார்.

56
என்றும் மறக்காத நன்றிக்கடன்
Image Credit : Facebook/MGR

என்றும் மறக்காத நன்றிக்கடன்

 'மலைக்கள்ளன்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமன்றி, எம்.ஜி.ஆருக்கு 'மக்கள் திலகம்' என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க மறைமுகக் காரணமாக இருந்த சிவாஜியின் சிபாரிசை எம்.ஜி.ஆர் ஒருபோதும் மறந்ததில்லை. பிற்காலத்தில் அவர்கள் இருவரும் அரசியலிலும், சினிமாவிலும் இரு வேறு பாதைகளில் பயணித்தாலும், தனக்கு இக்கட்டான சூழலில் உதவிய அந்த 'தம்பி' சிவாஜியின் பெருந்தன்மையை எம்.ஜி.ஆர் இறுதிவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வந்தார்.

66
ரஜினியின் தளபதி வசனம் நினைவுக்கு வரும்
Image Credit : Google

ரஜினியின் தளபதி வசனம் நினைவுக்கு வரும்

திரையுலகில் போட்டி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அந்தப் போட்டியையும் தாண்டி ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்பதும், இக்கட்டான சூழலில் கைகொடுப்பதும் தான் உண்மையான மனிதநேயம். சிவாஜி கணேசன் அன்று காட்டிய அந்தப் பெருந்தன்மையும், நண்பனின் வாழ்வாதாரத்திற்காகக் கொள்கையைத் தளர்த்தி வசனம் எழுதிய கருணாநிதியின் நட்பும், எம்.ஜி.ஆர் எனும் ஒரு மாபெரும் சகாப்தம் உருவாகக் காரணமாக அமைந்தன. 'மலைக்கள்ளன்' திரைப்படம் வெறும் ஒரு மெகா ஹிட் படம் மட்டுமல்ல; அது தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளுக்கு இடையே இருந்த பிணைப்பிற்கும், நன்றியுணர்விற்கும் சான்றாக இன்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது. இந்த கதையை படிப்பர்களுக்கு ரஜினியின் தளபதி வசனம் நினைவுக்கு வரும்தானே? நட்புன்னா என்ன தெரியுமா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சிவாஜி கணேசன்
எம்.ஜி.ஆர்.
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யின் கேரியரை மாற்றிய தேவாவின் 'மேஜிக்கல்' மெட்டுகள்.! மறக்க முடியுமா இந்த 'மாஸ்' பாடல்களை?
Recommended image2
தூங்க விடாமல் ரசிக்க வைக்கும் மோகன் பாடல்கள்! சந்தோஷம் தரும் இரவு நேர ஸ்பெஷல் ப்ளே லிஸ்ட்!
Recommended image3
காதல் காயங்களுக்கு மருந்து தடவிய டி.ராஜேந்தர்.! டிஜிட்டல் காலத்திலும் அழியாத டி.ஆர். எமோஷனல் ஹிட்ஸ்!
Related Stories
Recommended image1
சிவாஜி, கமலுக்கு முன்பே நிகழ்த்தப்பட்ட சாதனை.! நடிப்பில் மாஸ் காட்டிய எம்.என்.நம்பியார்!
Recommended image2
சிவாஜி கணேசனையே அழ வைத்த கண்ணதாசன் பாடல்.! ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணீர் விட்டு கதறிய நடிகர் திலகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved