கொரோனா நேரத்தில் மலர்ந்த சித்ராவின் காதல்..! இந்த விஷயம் தெரியுமா?
First Published Dec 9, 2020, 4:16 PM IST
சின்னத்திரை தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இவரை பற்றிய பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இவரது காதல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சித்ரா எந்த ஒரு திரையுலக பின்னணியும் இன்றி, பல்வேறு கஷ்டங்களை கடந்து தன்னை ஒரு சீரியல் நடிகையாக நிலைநிறுத்திக்கொண்டவர். ஆரம்பத்தில் சின்னபாப்பா பெரியபாப்பா சீரியலில் காமெடி வேடமே கிடைத்தாலும் அதையும் சவாலாக எடுத்து நடித்தார்.

தற்போது இவர் விஜய் டிவியில் நடித்து வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவ்வப்போது சிரித்த முகத்துடன் இவர் பதிவிடும் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் ரசிகர்கள் பெருமளவு ரசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?