பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.  அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். "குளிர் 100" படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் "ராஜா, ராணி" தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். சீரியலில் சின்னய்யா...சின்னய்யா... என்று கொஞ்சிய ஆல்யா ரசிகர்கள் மனதை மட்டுமல்ல சஞ்சீவையும் கவர்ந்தார். 

காதலில் கசிந்துருகிய ஆல்யா மானசா , சஞ்சீவ் ஜோடி வெற்றிகரமாக திருமணமும் செய்து கொண்டனர். இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில், ஆல்யா மானசா கர்ப்பமானார். இதனால் சஞ்சீவ் மட்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான ஆல்யா மானசா தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். 

இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!

மேலும் விஜய் டி.வி. நடத்தி வந்த டான்சிங் சூப்பர் ச்டார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஆல்யாவிற்கு அந்த நிகழ்ச்சியின் போது வளைகாப்பு நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆல்யா மானசாவின் பெற்றோர் பங்கேற்றனர். பல ஆண்டுகளாக பொற்றோரை பிரிந்திருந்த ஆல்யா, அவர்களை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வடித்தது, அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது. 

இதையும் படிங்க: சித்தார்த்தை ஏன் பிரிந்தேன்... முதல் முறையாக மனம் திறந்த சமந்தா...!

இந்நிலையில், ஆல்யா மானசாவிற்கு நேற்று இரவு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சஞ்சீவ், எனக்கு மகள் பிறந்திருக்கிறாள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தாயும், சேயும் நலமாக உள்ளோம். உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு தேவை. பப்பு குட்டிக்கு இன்னொரு  பப்பு குட்டி வந்தாச்சு என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிகளுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.