அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின்  டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.

அந்த படத்தில் விஜய் அவரை குண்டம்மா... குண்டம்மா... என அழைத்து வெறியேத்தும் சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த ஒரே சீனில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார் பாண்டியம்மாள்.... இல்லை, இல்லை இந்திரஜா. 

"பிகில்" படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந்திரஜா தற்போது விதவிதமான போட்டோ ஷூட்களில் பங்கேற்று வருகிறார். முதன் முறையாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சிம்பிள் மேக்கப், செமையான மார்டன் டிரஸில் இந்திரஜா வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகின. 

அதனைத் தொடர்ந்து, டிரெடிஷனல் லுக்கில், சேலை கட்டி நடத்திய போட்டோ ஷூட், மாடர்ன் லுக்கை விட சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் லைக்குகளை குவித்தனர். தற்போது இந்திரஜா மற்றொரு மார்டன் உடையில் எடுத்த அசத்தல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

எடுப்பான டிரஸ் கலர், அளவான மேக்கப், அழகான புன்னகை என அசத்தலாக போஸ் கொடுத்திருக்கும் இந்திரஜாவின் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. உருவத்தை பிரதானமாக வைத்து கேலி செய்பவர்களுக்கு, இந்திரஜாவின் போட்டோ ஷூட்டுகள் புதிதாக தன்னம்பிக்கை தரும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திரஜாவின் அந்த அசத்தல் போட்டோஸ் இதோ...