தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. பக்கா சென்னை பொண்ணான சமந்தா, மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் வைத்தார். பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் சமந்தா. 

இதையும் படிங்க: அட்லிக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்... தளபதியை “மாஸ்டர்” பிளான் போட்டு தூக்கிட்டார் போல...!

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் இருந்து விலகியதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. 

நாக சைதன்யாவை காதலிப்பதற்கு முன்பு சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று காத்திருந்த நிலையில், பிரேக் அப் அறிவிப்பு தான் வந்தது. இதனிடையே நீண்ட காலமாக சித்தார்த் பற்றி பேசாமல் இருந்த சமந்தா தற்போது அதுகுறித்து மனம் திறந்துள்ளார். 

இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

தனது கணவர் மற்றும் முன்னாள் காதலரான சித்தார்த் குறித்து சமந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். சாவித்ரி போன்று நானும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய பிரச்சனையில் சிக்கியிருப்பேன். ஆனால் நல்ல வேளையாக நான் ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொண்டு அந்த உறவில் இருந்து வெளியேறிவிட்டேன். அந்த காதல் எனக்கு நல்லது அல்ல என்பதை உணர்ந்த பிறகே பிரிந்துவிட்டேன். என் வாழ்வில் நாக சைதன்யா வந்ததற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.