தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கயவர்கள் பட்டியலில் இருந்து டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸுக்கு நேற்றிலிருந்து ‘விடுதலை’ அளித்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

 

கடந்த சில மாதங்களாகவே வரிசையாக திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறி வந்த ஸ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மாஸ்டரை மற்றவர்களை விட சற்று ஆழமாகவே டேமேஜ் செய்திருந்தார்.ஸ்ரீரெட்டி கொடுத்த தைரியத்தில் லாரன்ஸால் பாதிக்கப்பட்ட மேலும் சில நடிகைகளும் மி டு’ என்று இறங்கவே சற்று கதிகலங்கிப்போனவர் சில மாஸ்டர் பிளான்கள் செய்து நேற்று ஸ்ரீரெட்டியை தனது வீட்டுக்கு வரவழைத்து, தனது அடுத்த படத்துக்கு ஆடிஷன் எதுவும் எடுக்காமலே அட்வான்ஸ் கொடுத்து அனுப்பி வைத்தார். 

அந்த நல்ல செய்தியை தனது முகநூல் நண்பர்களுக்கு இன்று பதிவிட்ட ஸ்ரீரெட்டி, ‘ நேற்று நல்லபடியாக மாஸ்டர் ராகவா லாரன்ஸை அவரது இல்லத்தில் சந்தித்தேன். என்னை நல்லபடியாக கவனித்துக்கொண்ட அவர் தனது அடுத்த படத்துக்கான அட்வான்ஸையும் கொடுத்தார். அவர் நல்லவர்’ என்று எழுதியிருக்கிறார்.

லாரன்ஸ் ஏற்கனவே மிக அருவருப்பாக நடந்துகொண்ட கதையை ஸ்ரீரெட்டி பதிவிட்டதை இனி மக்கள் தங்கள் மனதிலிருந்து டெலீட் செய்துகொள்ளவேண்டியதுதான்.