மக்களே உஷார்.. இன்று நாளையும் இந்த 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசுமாம்.. வானிலை மையம் டேஞ்சர் அலர்ட்!
தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Rain
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
Heat wave
இன்று முதல் வரும் 28-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: Today Gold Rate in Chennai: அப்பாடா! நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்! தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Heat wave
இந்நிலையில் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.