இன்டர்நெட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் பூனம் பாண்டே.  சோசியல் மீடியாவில் உள்ள தன்னை பின்தொடரும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக பல ஹாட் போட்டோஸை அப்லோடு செய்து , அனைவரது தூக்கத்தையும் கெடுத்து வருகிறார். சன்னி லியோனைப் போலவே  பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 2013ம் ஆண்டு வெளியான நாஷா எனும் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாண்டே, தொடர்ந்து, கிளாமருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்துள்ளார். 

ஆபாச நடிகையாக இருந்த பூனம் பாண்டே தற்போது அதை எல்லாம் விட்டு விட்டு மாடலிங் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக  தனது ஹாட் போட்டோஸை பகிர்ந்து வருகிறார்.  இன்ஸ்டாகிராமில் டாப்லெஸ், பிகினி மற்றும் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றி சூடேற்றி வருகிறார்.

தனது கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவதற்காக தனி வெப்சைட் ஒன்றை நடத்தி வரும் பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.  லாக்டவுன் உத்தரவை மீறி காதலருடன் காரில் ஊர் சுற்றியதால் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. போதாக்குறைக்கு அவ்வப்போது காதலருக்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோக்களை வேறு வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறார். 

இந்நிலையில், பல வருடங்களாக காதலித்து வரும் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட, அவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.