YouTuber TTF Vasan bike accident : பைக்கில் வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் டிடிஎப் வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

யூடியூப் மூலம் பேமஸ் ஆனவர் டிடிஎப் வாசன். இவர் யூடியூப்பில் பைக் சாகசம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் மில்லியன் கணக்கில் பாலோவர்களை பெற்றுள்ள இவர் அதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார். அதுமட்டுமின்றி சர்ச்சைக்கு பஞ்சமில்லாத யூடியூபராகவும் வலம் வருகிறார் டிடிஎப் வாசன். அதிவேகமாக பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இவர்மீது ஏற்கனவே பல முறை வழக்குப்பதிவும் செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை யூடியூப்பில் கலக்கி வந்த டிடிஎப் வாசன் விரைவில் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் நடிப்பில் மஞ்சள் வீரன் என்கிற திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்க உள்ளார் டிடிஎப். இப்படத்தை செல் அம் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கப்பட உள்ளது.

யூடியூபர் டிடிஎப் வாசன் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர். இவர் இந்தியா முழுவதும் பைக்கில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றிருக்கிறார். அந்த வகையில் நேற்று தனது நண்பர் அஜீஸ் உடன் மகாராஷ்ட்ராவுக்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார் டிடிஎப். அப்போது காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது பைக்கில் வீலிங் செய்தபடி பயணித்துள்ளார் டிடிஎப். அப்போது நிலைதடுமாறிய டிடிஎப், சாலை தடுப்பின் மீது மோதியதில், இவர் ஒருபக்கம் தூக்கி வீசப்பட்டு கீழே விழ, பைக் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது.

இதையும் படியுங்கள்... பைக்கில் வீலிங் செய்து கொடூர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்..! உடல்நிலை எப்படி உள்ளது என தெரியுமா.?

Scroll to load tweet…

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் வலது கையில் மாவு கட்டு போட்டுள்ளார். டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

Scroll to load tweet…

இந்நிலையில், பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது மற்றும் பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிடிஎப் வாசனின் இந்த செயலுக்கு சோசியல் மீடியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரைப் பார்த்து அவரது பாலோவர்களும் இதுபோன்று செய்ய முயல்வார்கள் என்பதால் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... என் படத்துக்கு யாரும் பிளாக்கில் டிக்கெட் வாங்காதீங்க... ஷூட்டிங் தொடங்கும் முன்பே அலப்பறை கெளப்பும் TTF வாசன்