என் படத்துக்கு யாரும் பிளாக்கில் டிக்கெட் வாங்காதீங்க... ஷூட்டிங் தொடங்கும் முன்பே அலப்பறை கெளப்பும் TTF வாசன்
மஞ்சள் வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள டிடிஎப் வாசன், தன்னுடைய ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபராக வலம் வருபவர் டிடிஎப் வாசன். இவர் யூடியூப்பில் அதிவேகமாக பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பேமஸ் ஆனார். இதனால் சர்ச்சையிலும் சிக்கிய டிடிஎப் வாசன் மீது வழக்குகளும் பதியப்பட்டன. பின்னர் போலீசுக்கே சவால்விடும் வகையில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய அவர், அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய வண்ணம் உள்ளார். அண்மையில் கூட அவர் சென்ற கார், டூவிலர் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல் ஆனது.
அந்த சமயத்தில் அவர் ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றதாக செய்திகளும் வெளியாகின. இதைப் பார்த்து கடுப்பான டிடிஎப் வாசன், தன்னைப்பற்றிய அவதூறு பரப்பப்படுவதாக கூறி வருத்தப்பட்டார். தற்போது டிடிஎப் வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்கும் முதல் படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை செல் அம் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... எங்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை: ஆஸ்கர் இயக்குநர் மீது பொம்மன் - பெள்ளி தம்பதி குற்றச்சாட்டு
மஞ்சள் வீரன் படத்தின் ஷூட்டிங்கிற்காக தயாராகி வரும் டிடிஎப் வாசன், தன்னுடைய ரசிகர்களுடன் அண்மையில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மஞ்சள் வீரன் படத்துக்கு டிக்கெட் Give Away பண்ணுவீங்களா என கேட்டார். இதற்கு பதிலளித்த வாசன், என்னால முடிஞ்ச அளவுக்கு பண்றேன். இன்னொரு முக்கியமான விஷயம், பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவுக்கு டிக்கெட் கிடைச்சதுனா எல்லாரும் போயிடுங்க. ஒருவேளை டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தயவுசெய்து பிளாக்கில் வாங்கிலாம் போகாதீங்க. அந்த காசை வீணாக்காதீங்க. நியாயமான விலைல டிக்கெட் கொடுத்து படத்தை பாருங்க” என கூறி உள்ளார்.
அவர் பேசிய இந்த வீடியோ தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஷூட்டிங்கே தொடங்கப்படாத நிலையில், பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ டிக்கெட் பற்றி பேசுவது ரொம்ப ஓவராக இருக்கிறது என சாடி வருகின்றனர். ஒரு சிலரோ, இவன் என்ன சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறான் என டிடிஎப் வாசனை வறுத்தெடுத்து வருகின்றனர். இப்பவே இப்படினா, படம் ரிலீஸ் ஆன பின் என்னென்ன ட்ரோல்களையெல்லாம் சந்திக்க உள்ளாரோ இந்த மஞ்சள் வீரன்.
இதையும் படியுங்கள்... உங்க பாவ யாத்திரையில்... விஜய்யை இழிவுபடுத்துவதா? - அண்ணாமலையை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்