Asianet News TamilAsianet News Tamil

உங்க பாவ யாத்திரையில்... விஜய்யை இழிவுபடுத்துவதா? - அண்ணாமலையை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்

அண்ணாமலையின் பாத யாத்திரையில் விஜய் மக்கள் இயக்க கொடி பயன்படுத்தப்பட்டதற்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Gayathri raghuram slams Annamalai for using vijay makkal iyakkam flag in padayatira
Author
First Published Aug 6, 2023, 12:41 PM IST | Last Updated Aug 6, 2023, 12:41 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் பாத யத்திரை மேற்கொண்டுள்ளார். என் மண்... என் மக்கள்’ என்கிற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த பாத யாத்திரையில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்துகொண்டு அவருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலையின் பாத யாத்திரை தற்போது மதுரையை வந்தடைந்துள்ளது.

அந்த வகையில் நேற்று மதுரையில் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டபோது விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியுடன் ஒரு கும்பல் வலம் வந்ததன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது. இதனால் விஜய், அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்கிற கேள்வியும் எழுந்தது. இதைப்பார்த்து பதறிப்போன விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், அந்த கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வலம் வந்தது எங்கள் நிர்வாகிகளே இல்லை என கூறினார்.

இதையும் படியுங்கள்... அண்ணாமலைக்கு விஜய் ஆதரவா? நடைபயணத்தில் கொடியோடு பங்கேற்றது ரசிகர் மன்ற நிர்வாகிகளா.? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

Gayathri raghuram slams Annamalai for using vijay makkal iyakkam flag in padayatira

இந்நிலையில், இச்சம்பவம் குறித்தும் செல்லூர் ராஜுவை அண்ணாமலை விமர்சித்து பேசியதையும் கண்டித்து நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “உன் பேச்சை யார் கேட்பது? யாரும் கண்டுகொள்வதில்லை. குரைப்பதை நிறுத்திவிட்டு டெல்லியில் இரண்டு நாட்கள் ஓய்வெடுங்கள். உங்கள் பாவங்கள் தமிழகத்திற்கு தேவையில்லை. அ.தி.மு.க.வில் யாரும் உங்களை மதிப்பதில்லை, நீங்கள் சொல்வதை செல்லூர் ராஜு அண்ணாவும் பொருட்படுத்துவதில்லை. 

டெல்லியில் உங்கள் வளர்ப்பு தந்தையிடம் உங்கள் விளம்பர கோபத்தை வைத்துக்கொள்ளுங்கள். முதிர்ச்சியற்ற பிளாப் அண்ணாமலை. உங்கள் பாவ யாத்திரையில் பாஜக தொண்டர்களை விஜய் மக்கள் இயக்கக் கொடிகளை ஏந்திச் செல்ல வைப்பதுதான் மிகக் குறைவானது. நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சியையும் அறிவிக்கவில்லை அல்லது அரசியல் கேரியரை அறிவிக்கவில்லை. விஜய்யின் பெயரை உங்களுக்கான விளம்பரத்திற்காக பயன்படுத்தி, அவரது ரசிகர்களை இழிவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என காயத்ரி சாடி உள்ளார்.

இதையும் படியுங்கள்... 'என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்' ரஜினியை சீண்டும் விதமாக விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios