MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • அண்ணாமலைக்கு விஜய் ஆதரவா? நடைபயணத்தில் கொடியோடு பங்கேற்றது ரசிகர் மன்ற நிர்வாகிகளா.? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

அண்ணாமலைக்கு விஜய் ஆதரவா? நடைபயணத்தில் கொடியோடு பங்கேற்றது ரசிகர் மன்ற நிர்வாகிகளா.? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நடை பயணத்தில் விஜய் ரசிகர் மன்ற கொடியோடு சிலர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக நடை பயணத்தில் பங்கேற்ற நபர்களுக்கும் விஜய் மக்கள் மன்றத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லையென புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Aug 06 2023, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

அண்ணாமலை நடை பயணம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரையை தொடங்கியுள்ளார். ராமேஸ்வரத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக தற்போது மதுரையை அடைந்துள்ளது. இந்த நடை பயணமானது ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரையில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டுள்ளனர்.

23

அண்ணாமலைக்கு விஜய் ஆதரவா?

இந்தநிலையில் மதுரை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அவரது பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விஜய் மக்கள் மன்ற கொடியோடு சிலர் கலந்து கொண்டனர்.விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்புத் தலைவர் சி.கே.பத்ரி சரவணன் உளிட்ட ஏராளமானோர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்றனர். அப்போது அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜகவிற்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளாரா என்ற கேள்வியானது எழுந்தது. 

33

நடை பயணத்தில் கலந்து கொண்டது யார்.?

இதனையடுத்து இது தொடர்பாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்  எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும்  அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பிஜேபி
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: ராஜினமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி.! மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்கபோவது இதுதான்.! அதிரடி திருப்பங்கள்.!
Recommended image2
ADMK Clash: மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?! ஓபிஎஸ் போல் ஓரங்கட்டப்படும் எடப்பாடி பழனிச்சாமி.!
Recommended image3
Vijay: தளபதியின் 'கோல்டன்' பாலிடிக்ஸ்! ஒவ்வொரு வருடமும் 2000 கி. தங்கம் - தாங்குமா தமிழக நிதிநிலை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved