Asianet News TamilAsianet News Tamil

99 மீனவர்களை காப்பாற்ற பிரபல நடிகர் வைத்த கோரிக்கை! புயல் வேகத்தில் நடவடிக்கை எடுத்த முதலமைச்சர்!

இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கடலுக்கு மீன் பிடித்த சென்ற ஆந்திராவை சேர்ந்த 99 மீனவர்கள், சென்னை துறைமுகத்தில் சிக்கி உண்ண உணவு இன்றி தவித்து வருவதை அறிந்த, நடிகரும், ஜனசேனை கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தமிழக முதல்வருக்கு சமூக வலைத்தளத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.
 
pawan kalyan requesting Tamil nadu government
Author
Chennai, First Published Mar 31, 2020, 2:42 PM IST

இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கடலுக்கு மீன் பிடித்த சென்ற ஆந்திராவை சேர்ந்த 99 மீனவர்கள், சென்னை துறைமுகத்தில் சிக்கி உண்ண உணவு இன்றி தவித்து வருவதை அறிந்த, நடிகரும், ஜனசேனை கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தமிழக முதல்வருக்கு சமூக வலைத்தளத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.

இது குறித்து பவன் கல்யாண், முதலமைச்சர் எடப்பாடி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உயர்திரு தமிழக முதல்வர்  ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

pawan kalyan requesting Tamil nadu government

ஸ்ரீகாகுளம் மாவட்டம், சோமபேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க, தமிழக கடற்கரைக்கு சென்ற சுமார் 99 மீனவர்கள் கொரோனா  வைரஸ் பாதிப்பால் நடைபெறும், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

அவர்களுக்கு போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இது குறித்து செய்வதறியாது தவித்து வருகிறார்கள். தொண்டர்கள் மூலம் இந்த விடயத்தை அறிந்து, நான் மிகவும் வேதனை அடைந்தேன். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இந்த விடயம் தெரிந்து உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி, அவர்களின் ஊருக்கு அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

pawan kalyan requesting Tamil nadu government

 மேலும் ஸ்ரீகாகுளம் ஜில்லா கலெக்டர் அவர்கள், இது குறித்து மேற்கொண்ட தகவலையும், அந்த 99 மீனவர்கள் பற்றிய தகவல்களையும் அந்த கவலையுற்ற மீனவ குடும்பங்களுக்கு உடனே தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியிருந்தார்.

 பவன் கல்யாண் மூலம் இந்த விஷயம் தெரிய வந்ததுமே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

pawan kalyan requesting Tamil nadu government

மேலும் இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி பவன் கல்யாணுக்கு ட்விட்டர் பக்கத்தில், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு 99 மீனவர்களையும் பத்திரமாக மீட்க உத்தரவிட்டுள்ளாகவும்,   அவர்களை பத்திரமாக பாதுகாப்போம், கவலை வேண்டாம் என பதில் கொடுத்தார்.

இந்த தகவலை  பவன் கல்யாண், ஜனசேனை கட்சியின் சமூகவலைதளத்தில் பதிவிட்டு, முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios