Asianet News TamilAsianet News Tamil

Teenz: என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்! பார்த்திபன் செய்த அதிரடி செயலால் கவனம் பெரும் 'டீன்ஸ்'!

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் டிக்கெட் விலை குறித்த அறிவிப்பை கூறி, பலரையும் அதிர வைத்துள்ளார்.
 

Parthiban Directing Teenz movie ticket rate is 100 Rupees Only mma
Author
First Published Jul 8, 2024, 2:24 PM IST

புதுமை நாயகனாக அறியப்படும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட புதிய சாகச திரில்லர் படமாக 'டீன்ஸ்' படத்தை இயக்கி உள்ளார். மேலும் உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் இப்படத்தின் முதல் பார்வை வெளியானது.

இந்திய சினிமாவில் புதுமையான முயற்சிகளின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர் - இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது புதிய பாதையில் இன்னொரு மைல்கல்லாக 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். 

Parthiban Directing Teenz movie ticket rate is 100 Rupees Only mma

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். 

Karthigai Deepam: தீபா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்! கார்த்திக் முடிவால் பதற்றத்தில் ரம்யா! கார்த்திகை தீபம் அப்டேட்

மிகவும் வித்தியாசமான முயற்சியாக இந்த திரைப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் வெளியாவது உலகிலேயே இது தான் முதல் முறை, அதுவும் உலகெங்கிலும், அதுவும் தணிக்கை சான்றிதழோடு வெளியானது. மேலும் இப்படத்தின் டீசர், ட்ரைலர் போன்றவற்றிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படிக்கும் டீன் ஏஜ் மாணவர்கள், ஒரு கிராமத்திற்குள் சென்று, அமானுஷ்யம் நிறைந்த காட்டிற்குள் சிக்கி கொள்ள, பின் என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூறியுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.

Parthiban Directing Teenz movie ticket rate is 100 Rupees Only mma

இத்திரைப்படத்திற்கு D. இமான் இசையமைக்க, காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படம் குழந்தைகளை பெற்ற ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும் என்கிற எண்ணத்தில், இப்படத்தின் டிக்கெட் விலை சில தினங்களுக்கு ரூ.100 மட்டுமே என அறிவித்துள்ளார்.

ஊரே மெச்சும் படி மகள் திருமணத்தை நடத்திய நடிகர் சிவக்குமார்! சூர்யா - கார்த்தி சகோதரி பிருந்தா வெட்டிங் போட்டோ

Parthiban Directing Teenz movie ticket rate is 100 Rupees Only mma

இதுகுறித்து வெளியாகியுள்ள போஸ்டரில், "எதற்காகவும் நான் என்னை குறைத்து கொண்டதே இல்லை. பட் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.100 மட்டுமே. இதில் நட்டமே இல்லை. வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே. என தெரிவித்துள்ளார்.

பார்த்திபனின் முந்தைய படைப்பான 'இரவின் நிழல்' தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்று சாதனை படைத்த நிலையில் அவரது புத்தம் புதிய புதுமை திரைப்படம் 'டீன்ஸ்' மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios