ஒரே பிரேம்.. ரெண்டு லாஸ்.. ஆடிப்பாடி என்ஜாய் செய்த அந்த இருவரும் இப்போ இல்ல - வேதனையில் மூழ்கிய ரசிகர்கள்!
எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோவில் இன்று ஆதி குணசேகரன் என்ன திட்டமெல்லாம் தீட்டப்போகிறார் என்பதைக் காண ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக வந்து இறங்கியது அவருடைய மறைவு.

தமிழ் சினிமா உலகத்தில் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொள்ள தனது ஏழ்மையை வென்று வெற்றிப் பாதையில் பயணித்து வந்தவர் அவர். இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து. எஸ் ஜே சூர்யா உள்பட பல சிறந்த முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி அதன் பிறகு கடந்த சில வருடங்களாக சிறந்த குணசித்திர மற்றும் வில்லன் நடிகராக திரை உலகில் வலம் வந்தவர்.
குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் இவர் மிகப்பெரிய வில்லனாக இருந்தாலும் இவருடைய டயலாக் டெலிவரிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது என்றால் அது மிகையல்ல. தனது குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்து வந்த மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அனைவரையும் மகிழ்வித்த மாரிமுத்து மற்றும் மறைந்த நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவருடைய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் வரும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியில், ஒரே அணியில் இருந்து இவர்கள் இருவரும் அரங்கையே மகிழ்ச்சிபடுத்த விளையாடிய விளையாட்டுக்கள் இன்னும் சுவடு மாறாமல் இருக்கும் நிலையில், அடுத்தடுத்து இந்த இருவரும் மரணித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.எஸ். சிவாஜி மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருமே தமிழ் சினிமா வரலாற்றில் மிகசிறந்த நடிகர்களாக வலம்வந்தவர்கள். எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும், அதை சிறந்த முறையில் நடிக்கும் திறன்கொண்டவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.