அடல்ட் படமான  "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். 'துருவங்கள் பதினாறு', 'பாடம்', 'மணியார் குடும்பம்' என பல படங்களில் நடித்திருந்தாலும், எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. 'நோட்டா', 'கழுகு 2', 'ஜாம்பி' படங்கள் யாஷிகாவிற்கு ஓரளவுக்கு பெயர் பெற்றுத் தந்தது.

 விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற யாஷிகா ஏகப்பட்ட புகழுக்கு சொந்தக்காரராக மாறினார். ரசிகர்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

 

இதையும் படிங்க: "என் ஆடையின் அளவை கணக்கிட யாருக்கும் உரிமை இல்லை"... தாறுமாறு கேள்வி கேட்ட நெட்டிசன்களுக்கு பிரபல நடிகையின் நெத்தியடி பதில்...!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் கிடைத்ததோ தவிர, சொல்லி கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்தே தீருவது என்று திட்டம் போட்ட யாஷிகா ஆனந்த், தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். 

நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் யாஷிகாவின் கவர்ச்சியின் தாராளம் நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா, வெங்காய விலை என நாடே ரணகளமாக மாறியுள்ள இந்த சமயத்தில், யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கறுப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் உடையில், அணிந்திருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படியாக, எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த். 

 

இதையும் படிங்க: அம்மாடியோவ்! ஓவர் கிளாமர் உடையில் போட்டோ போட்ட பிக்பாஸ் அபிராமி... என்னாச்சு, என்னாச்சு என கதறும் ரசிகர்கள்...!

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நாடே ரணகளத்துல இருக்கு... இப்ப இது தேவை தானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலரோ என்னம்மா டிரஸ் இது, என்ன சொன்னாலும் நீ அடங்க மாட்டியா என கமெண்ட் செய்துள்ளனர்.