தமிழில் 'வால்மீகி', 'அய்யனார்', 'சூரிய நகரம்' போன்ற படங்களில் நடித்தவர் மீரா நந்தன். மலையாள நடிகையான இவர், தற்போது துபாயில் ஒளிபரப்பாகும் மலையாள எஃப் எம் ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். தற்போது துபாயில் செட்டில் ஆகிவிட்ட மீரா நந்தன், அங்குள்ள புர்ஜ் கலிஃபா முன்பு நின்றிருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சிவப்பு நிற குட்டை உடையில் போட்டோ போட்ட மீரா நந்தனை, நெட்டிசன்கள் சரமாரியான கேள்விகளால் துளைத்தெடுத்தனர். 

'ஏன் இப்படி குட்டையான உடைகளை அணிகிறீர்கள்?', 'உங்களுக்கு பொருத்தமான உடைகளை போடுங்கள்' என சகட்டு மேனிக்கு அட்வைஸ் செய்தனர். சிலர் தேவையில்லாத ஆபாச கமெண்ட்களையும் பதிவிட்டனர். இதனால் கடுப்பான மீரா நந்தன், தன்னை விமர்சித்தவர்களுக்கு நெத்தியடி பதில் கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

"சில நாட்களாக நான் பதிவிட்ட புகைப்படங்களுக்கு மிகவும் மோசமான கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன. நான் குட்டையாக உடை அணிந்திருப்பதாக யாரும் குறை கூற முடியாது. இது என் வாழ்க்கை, அதற்குள் நுழைய யாருக்கும் உரிமையில்லை. இந்திய மற்றும் மார்டன் உடைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். என் ஆடையின் அளவை கணக்கிடும் உரிமை யாருக்கும் கிடையாது. நான் அணிந்திருக்கு உடையை வைத்து, என்னை தீர்மானிப்பதையும், ஆபாசமாக கமெண்ட் செய்வதையும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது"  என சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்துள்ளார். 

சமூகவலைத்தளங்களில் போட்டோக்களை பதிவிடுவது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம், அதில் தேவையில்லாமல் கருத்து கூறி வெறுப்பேற்றிய நெட்டிசன்களுக்கு மீரா நந்தன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.