Asianet News TamilAsianet News Tamil

விஜயுடன் நடிக்கும் நாஞ்சில் சம்பத்... அரசியலை அடுத்து சினிமாவிலும் அதகளம்!!

தெறி மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் தளபதி விஜயின் தளபதி 63 படம் வேகமாக படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கவுள்ளாராம்.

Nanjil sambath join hand with vijay
Author
Chennai, First Published Feb 22, 2019, 4:44 PM IST

தெறி மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் தளபதி விஜயின் தளபதி 63 படம் வேகமாக படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கவுள்ளாராம்.

சென்னை, பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடத்தப்பட்ட படபிடிப்பில், நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் இணைந்து, நடிகர் விஜய் நடனமாடி நடித்த, ஒரு பாடல் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. அதேபோல,  ஒரு பாடலுக்காக, சென்னையில் இருக்கும் நேப்பியர் பாலம் போலவே பிரம்மாண்டமான செட் போடப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டன. 

Nanjil sambath join hand with vijay

இதனையடுத்து நயன்தாராவுடனான, காதல் காட்சிகள் எடுக்கப்படவிருக்கின்றன. இதனால், விரைவில் இந்தப் பட சூட்டிங்கில் நடிகை நயன்தாரா ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார். 

இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் எல்.கே.ஜி., படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு" படத்தில் நடித்து வரும் அவர், விஜய் நடிக்கும் தளபதி 63 படத்திலும் நடிக்கப் போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லியின் மேலாளர் ஒருவர் நாஞ்சில் சம்பத்திடம் பேசி வருகிறாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios