இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு டும்.. டும்... டும்..! பிரபலங்கள் நேரில் வாழ்த்து..!
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜஸ்டின் பிரபாகரனுக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. இவரது திருமண புகைப்படம் வெளியாக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வெளியான 'பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து 'ஆரஞ்சு மிட்டாய்', 'ஒரு நாள் கூத்து', 'உள்குத்து', போன்ற பல படங்களுக்கு இசையமைத்தார்.
மேலும் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். குறிப்பாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான, 'டியர் காம்ரேட்' திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜஸ்டின் பிரபாகரன், சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷியாம்' படத்திற்கும் இசையமைத்திருந்தார். மேலும் பாலிவுட் திரையுலகில் 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பணியை தொடங்கினார்.
மேலும் செய்திகள்: மாலத்தீவில் ரொமான்ஸில் மல்லு கட்டும் ஷ்ரேயா - சித்து..! காதல் பொங்க... பொங்க... வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!
மிகக் குறுகிய காலத்தில் தன்னுடைய இசை திறமையால் மிகப்பெரிய உச்சத்தை அடைந்த ஜஸ்டின் பிரபாகரனுக்கு, இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. மிக பிரமாண்டமாக நடந்த இவரின் திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். ஜஸ்டின் பிரபாகரனின் திருமண புகைப்படத்தை பிரபல நடிகர் பால சரவணன் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு, எங்க கூட்டத்தின் கடைசி சிங்கிள் இன்று முதல், சங்க உறுப்பினர் ஆகிறார். வாழ்த்துக்கள் நண்பா என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: விரைவில் திருமணம்... காதலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஹரீஷ் கல்யாண்! வைரலாகும் புகைப்படம்!