மாலத்தீவில் ரொமான்ஸில் மல்லு கட்டும் ஷ்ரேயா - சித்து..! காதல் பொங்க... பொங்க... வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!
சமீபத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகர்களான சித்து-ஷ்ரேயா தம்பதி, மாலத்தீவுக்கு விசிட் நடித்துள்ள நிலையில், அங்கு காதல் பொங்க... பொங்க... இவர்கள் எடுத்து கொண்ட ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே சீரியல்களில் ஜோடியாக நடிக்கும், நாயகன் - நாயகி நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொள்ளவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ராஜா ராணி 1-சீரியல் ஆல்யா மானசா -சஞ்சய். சேத்தன் -தேவதர்ஷினி, ராஜ்கமல் -லதா ராவ், தொடங்கி செந்தில்- ஸ்ரீஜா, ரக்ஷிதா - தினேஷ் ,ஆலியா- சஞ்சீவ் என எத்தனையோ தம்பதிகளைப் உதாரணமாக சொல்லலாம்.
மேலும் செய்திகள்: 'வாரிசு' படத்தில் நடிக்கவில்லை? ஷூட்டிங் ஸ்பாட் சென்றதற்கு இது தான் காரணமாம்..!
இவர்களை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'திருமணம்' சீரியலில் கதாநாயகனாக நடித்த சித்துவும், கதாநாயகியாக நடித்த ஷ்ரேயாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் சித்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ராஜா ராணி 2' தொடரில் நடித்து வருகிறார். ஷ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ரஜினி' என்கிற தொடரில் நடித்து வருகிறார் .
மேலும் செய்திகள்: பிக்பாஸ் கேப்ரியல்லாவுடன் காதலா..? இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து உண்மையை உடைத்த ஆஜித்!
இருவரும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது... வெளியிடங்களுக்கு செல்லும் போது, தங்களின் ஷாப்பிங் வீடியோ, டூர் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த ஜோடி தற்போது, மாலத்தீவுக்கு சென்றுள்ளது. அங்கு இருவரும் ரொமான்ஸில் மல்லுக்கட்டும் விதமாக புகைப்படங்களை வெளியிட அந்த போட்டோஸ்... வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் செய்திகள்: அச்சு அசல் குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி..! த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.