பிக்பாஸ் கேப்ரியல்லாவுடன் காதலா..? இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து உண்மையை உடைத்த ஆஜித்!
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இருவர் ஆஜித் மற்றும் கேப்ரியல்லா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது காதலர்கள் என கிசுகிசுக்கப்பட்டது.
குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவி சீரியலான 7 சி சீரியலில் அறிமுகமானவர் கேப்ரியல்லா. இதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக 3, ராதிகாவுக்கு மகளாக சென்னையில் ஒருநாள், சமுத்திரக்கனி நடித்த அப்பா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக வரவேற்பு கிடைத்தாலும், இவரால் சீரியலில் ஹீரோயினாக கூட ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே அதிரடியாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.
மேலும் செய்திகள்: சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
கடைசி வரை நின்று விளையாடிய கேப்ரியல்லா... ஒரு கட்டத்தில் பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சீரியலில் ஹீரோயினாக நாட்டிற்கும் வாய்ப்பு கிடைத்தது.
gabriella
அந்த வகையில் தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர், பிக்பாஸ் வீட்டில் இருந்த போது... இவருக்கும் ஆஜித்துக்கும் ஏற்பட்ட நட்பு அவர்கள் வெளியே வந்த பிறகும் கூட தொடர்ந்து வருகிறது.
மேலும் செய்திகள்: கஞ்சா பூ கண்களால்... ரசிகர்களை போதையேற்றும் அதிதி! லோ அங்கிள் போஸில் பார்த்து நிலைகுலைய வைத்த போட்டோஸ்!
இருவரும் ஒன்றாக இணைந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் நடனம் ஆடினர். மேலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டான்ஸ் ஆடி அதன் வீடியோவையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
எனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூட சில வதந்திகள் பரவியது. இந்நிலையில் முதல் முறையாக ஆஜித்திடம், கேப்ரியல்லா உடனான காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு பதில் அளித்துள்ள ஆஜித், நாங்கள் இருவரும் அது போல் பழகியதே இல்லை. அண்ணன் - தங்கை உறவு முறையில் தான் பழகி வருவதாக உண்மையை உடைத்து கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: இலியானாவா இப்படி? டூ பீஸ் உடையில்... உச்ச கட்ட கவர்ச்சி! பார்த்ததுமே பதறவைத்த ஹாட் போட்டோஸ்!