கஞ்சா பூ கண்களால்... ரசிகர்களை போதையேற்றும் அதிதி! லோ அங்கிள் போஸில் பார்த்து நிலைகுலைய வைத்த போட்டோஸ்!
பிரமாண்ட இயக்குனரின் மகள் அதிதி ஷங்கர், விதவிதமான உடையில் போட்டோ ஷூட் செய்து வெளியிடும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தான் தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது இவர் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக வெளியிடும் புகைப்படங்களும் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
டாக்டர் படிப்பை படித்து முடிந்த பின்னர், யாரும் எதிர்பாராத விதமாக தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அதிதி ஷங்கர்.
மேலும் செய்திகள்: வசூலில் மிரள வைக்கும் 'பொன்னியின் செல்வன்'.. வெறும் 4 நாட்களில் உலகம் முழுவதும் இத்தனை கோடி காலெக்ஷனா?
தன்னுடைய முதல் படத்தை மிகவும் தெளிவாக தேர்வு செய்து... நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்திருந்தார் அதிதி. முத்தையா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்றாலும், நடிப்பில் ரசிகர்களை அசரவைத்தார்.
நடிப்பை தாண்டி, ஆட்டம்... பாட்டம்... என முதல் படத்திலேயே தன்னுடைய பன்முக திறமையால் ரசிகர்களை கவர்ந்திழுத்துவிட்ட, அதிதி ஷங்கர், 'விருமன்' படத்தின் வெற்றிக்கு பின்னர்... அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: பீஸ்ட்' படத்தால் வாரிசுக்கு வந்த பிரச்சனை? முரண்டு பிடிக்கும் தயாரிப்பாளரால் விஜய் படத்துக்கு வந்த சோதனை!
முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டி தூக்கிய 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மற்றொரு படத்திலும் விரைவில் அதிதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் செய்திகள்: பல்கலை கழகத்தில் சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்மிகா... படு ஜோராக நடக்கும் 'குட் பை' பட புரமோஷன்!
அதாவது அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், தமிழிழில் விஷ்ணு வர்தன் ஒரு படத்தை இயக்க தயாராகியுளளதாகவும், இந்த படத்தில் அதிதி ஷங்கர் தான் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோ யார் என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகாத நிலையில், விரைவில் இந்த படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: இயற்க்கை பூங்காவை போல் படு பிரமாண்டமாக தயாராகி இருக்கும் பிக்பாஸ் சீசன் 6 வீடு..! வைரலாகும் புகைப்படம்!
மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு அழகு அட்ராசிட்டி செய்து வரும் அதிதி... தற்போது பச்சை மற்றும் ஆரஞ்சு நிற லெஹன்கா உடையில் சைடு போஸ்... லோ அங்கிள் போஸ் என கொடுத்து ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். இந்த போட்டோஸ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.