பல்கலை கழகத்தில் சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்மிகா... படு ஜோராக நடக்கும் 'குட் பை' பட புரமோஷன்!
நடிகை ரஷ்மிகா நடித்துள்ள 'குட் பை' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்ட ராஷ்மிகா ரசிகர்கள் முன் சாமி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை ராஷ்மிகாவுக்கு அறிமுகம் கொடுத்தது கன்னட திரையுலகம் என்றாலும், தற்போது ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களாலும் ரசிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார்.
தெலுங்கில் இவர் நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தை தொடர்ந்து, வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்த ரஷ்மிகா தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.
குறிப்பாக கோலிவுட் திரையுலகில், தளபதி விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். பல நடிகைகள் தளபதியுடன் ஜோடி சேர முடியாத என... ஏங்கும் நிலையில் தமிழில் இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பது இவரது அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும்.
இதை தொடர்ந்து பாலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் இவர், அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ள 'குட் பை' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால் இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த படத்தின் புரொமோஷனில் கலந்து கொண்ட ராஷ்மிகா ரசிகர்கள் முன், புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி பாடலுக்கு கியூட் ரியாக்ஷனுடன் நடனம் ஆடியுள்ளார்.
பிங்க் நிற பேன்ட் மற்றும் கோட் அணிந்து, ரசிகர்களை கவரும் விதமாக டான்ஸ் ஆடிய ராஷ்மிகாவின் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.