'பீஸ்ட்' படத்தால் வாரிசுக்கு வந்த பிரச்சனை? முரண்டு பிடிக்கும் தயாரிப்பாளரால் விஜய் படத்துக்கு வந்த சோதனை!
பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் குறைந்த அளவிலேயே ஷேர் தொகை வசூலித்ததால், 'வாரிசு' படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க தமிழக விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'பீஸ்ட்' இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களோடு, முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலித்த நிலையில்... இப்படம் தமிழக ஷேர் உரிமை குறைவாக வசூலித்தால் 'வாரிசு' படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க தற்போது தமிழகத்தை சேர்ந்த விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய், தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம், போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: வசூலில் மிரள வைக்கும் 'பொன்னியின் செல்வன்'.. வெறும் 4 நாட்களில் உலகம் முழுவதும் இத்தனை கோடி காலெக்ஷனா?
பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜனவரி 12ஆம் தேதி, 'வாரிசு' திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
எனவே தற்போது இந்த படத்தில் விற்பனை பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின், தில் ராஜூ 'வாரி'சு பாடத்தின் தமிழக உரிமையை 80 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும், ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்க தமிழகத்தை சேர்ந்த விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: பல்கலை கழகத்தில் சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்மிகா... படு ஜோராக நடக்கும் 'குட் பை' பட புரமோஷன்!
இதற்கு முக்கிய காரணம் 'பீஸ்ட்' திரைப்படம் தானம், பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு, தமிழகத்தில் 60 கோடி ரூபாய் மட்டுமே இப்படம் ஷேர் வசூலித்தது. ஆனால் மாஸ்டர் திரைப்படம் 82 கோடி தமிழகத்தில் ஷேர் தொகை வசூலித்ததை மனதில் வைத்து கொண்டே தில் ராஜு விடாபிடியாக 80 கோடி ரூபாயில் இருந்து குறைக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் நல்ல விலைக்கு 'வாரிசு' படம் விற்பனை ஆகியுள்ளதால், தமிழக உரிமையை ஏரியா ஏரியாவாக பிரித்து விற்பனை செய்யவும் தில் ராஜு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகள்: பாவாடை தாவணியில் பட்டாம்பூச்சி போல்... விதவிதமாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை சிறகடிக்க வைத்த ரம்யா பாண்டியன்