பாவாடை தாவணியில் பட்டாம்பூச்சி போல்... விதவிதமாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை சிறகடிக்க வைத்த ரம்யா பாண்டியன்
உள்ளாடையோடு போஸ் கொடுத்து.. ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ச்சியில் கிறங்க வைத்த ரம்யா பாண்டியன் தற்போது பாவாடை தாவணியில், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கவர்ச்சி உடையிலும் சரி, கவர்ந்திழுக்கும் சேலையிலும் சரி... அழகு பதுமை போல் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை காந்தம் போல் தன்வசம் ஈர்க்கும் ரம்யா பாண்டியன், தற்போது பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
ஜோக்கர் படத்தில் எதார்த்தமான கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே... இவரது நடிப்புக்கும், ஜோக்கர் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதை' படத்தில் நடித்தார்.
மேலும் செய்திகள்: தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் விக்ரம்..!
இந்த படத்திற்கு எதிர்பாத்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் இவரது கவனம் சென்றது. அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை காட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவே இவர்... இடையழகை காட்டி வெளியிட்ட புகைப்படம் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது. எனினும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு எந்த ஒரு படவாய்ப்பும் கிடைக்கவிலை.
மேலும் செய்திகள்: இயற்க்கை பூங்காவை போல் படு பிரமாண்டமாக தயாராகி இருக்கும் பிக்பாஸ் சீசன் 6 வீடு..! வைரலாகும் புகைப்படம்!
எனவே மீண்டும் விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட, ரம்யா மிகவும் சாமர்த்தியமாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. எனினும் வெயிட்டான கதாபாத்திரத்திற்கு காத்திருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக... வெரைட்டியான உடையில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, பாவாடை தாவணியில் ரசிகர்களை சுழட்டி போடும் அழகில் ரம்யா பாண்டியன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: மீண்டும் இணைந்த பொன்னியின் செல்வன் படக்குழு! மகளுடன் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா ராய்! போட்டோஸ்