மீண்டும் இணைந்த பொன்னியின் செல்வன் படக்குழு! மகளுடன் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா ராய்! போட்டோஸ்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகும் நிலையில், நேற்று... பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் சேர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் படம் பார்த்துள்ளார் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியான நாள் முதலே... பலர் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வந்தாலும், சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
இப்படி தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு கிடைத்தாலும், வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. இரண்டு நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், மூன்றே நாட்களில் சுமார் 220 கோடிக்கும் மேல் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தை விட, அமெரிக்க, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் அளவில் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் தாமரை செல்விக்கு அடித்த ஜாக்பாட்..! இந்த இருவரில் ஒருவருக்கு ஹீரோயினாக நடிக்கிறாரா? வைரல் புகைப்படம்!
ஏ.ஆர்.ரகுமான், பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிதாக கைகொடுக்க வில்லை என ரசிகர்கள் கூறி வந்தாலும், பாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்புக்கும், ரவி வர்மனின் ஒளிப்பதிவும் பாராட்டும் வகையில் உள்ளது, கலை பணிகளை மேற்கொண்டுள்ள தோட்டா தரணி, தத்ரூபமாக ஒவ்வொன்றையும் வடிவமைத்து சோழர் காலத்தை கண் முன் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் சத்தியம் சினிமாஸில் ஒன்றாக சேர்ந்து இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர் மகளுடன் வந்து படம் பார்த்துள்ளார். அதே போல், ஜெயம் ரவி மனைவியுடன் வந்துள்ளார். திரிஷா தன்னுடைய அம்மாவுடன் வந்து படம் பார்த்தார். இது குறித்த, புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: விக்ரம் மகன் துருவுக்கு ஜோடியாகிறாரா ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா..? உண்மையை உடைத்த தந்தை செல்வமணி!