8 வருடத்திற்கு பின் கர்ப்பமான சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா..! வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்!
சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட, மிர்ச்சி செந்தில் தன்னுடைய மனைவி ஸ்ரீஜாவின் வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் பெற்றோர் ஆக உள்ள சந்தோஷமான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரபல ரேடியோ ஜாக்கியான 'மிர்ச்சி' செந்தில், திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலமாகவும் மிகவும் பிரபலமானவர். அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி சீரியல் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது இவரும், இவரின் மனைவி ஸ்ரீஜாவும் தான்.
சரவணன் மீனாட்சி - சீரியலில் இவர்கள் இவருக்குமான கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது. எனவே இவர்கள் இருவரும் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில், நிஜத்திலும் இருவருக்கும் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, திருமண வாழ்க்கையில் ஒன்று சேர்த்தனர்.
மேலும் செய்திகள்: உடல்பயிற்சி செய்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..! சல்மான் கானை சோகத்தில் ஆழ்த்திய மரணம்..!
திருமணம் ஆனபின்னரும், இவர்வரும் சேர்ந்து 'மாப்பிள்ளை' என்கிற ஒரு தொடரில் நடித்தனர். பின்னர் செந்தில் மட்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்த நிலையில், ஸ்ரீஜா தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகி, குடும்பத்தை கவனித்து வந்தார்.
செந்தில் - ஸ்ரீஜாவுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு நடந்த புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் இருவரும் பெற்றோர் ஆக உள்ள தகவலை, கூறியுள்ளார் செந்தில். இதை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: திரையுலகத்தில் அதிர்ச்சி..! 41 வயதில் பிரபல தமிழ் பட நடிகர் மாரடைப்பால் மரணம்.!
மிர்ச்சி செந்தில், தொலைக்காட்சி தொடர் மட்டுமின்றி, தவமாய் தவமிருந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.