திரையுலகத்தில் அதிர்ச்சி..! 41 வயதில் பிரபல தமிழ் பட நடிகர் மாரடைப்பால் மரணம்.!
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
41 வயதே ஆகும் தர்ஷன் தர்மராஜ், சிட்னி சந்திரசேகரன் இயக்கிய ஏ-9 என்ற தொலைக்காட்சி நாடகத்தின் மூலம் நாடக துறையில் அடியெடுத்து வைத்தவர். 2008 இல், 'பிரபாகரன்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார். இவரது முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. காரணம் 'பிரபாகரன்' படத்தில் அவர் தமிழீன விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கேரக்டரில் நடித்தார்.
அதன்பிறகு, மச்சாங், இனிவான், மாதா, சுனாமி மற்றும் கோமாலி கிங்ஸ் உள்ளிட்ட பல சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதுவா? அதிரபோது பிக்பாஸ் வீடு!
எதார்த்தமான நடிப்புத் திறமைகள் நிறைந்த நடிகராக விமர்சகர்களால் தொடர்ந்து பாராட்டப்பட்ட தர்மராஜ், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. பலர் இவருக்கு தொடர்ந்து தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.