உடல்பயிற்சி செய்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..! சல்மான் கானை சோகத்தில் ஆழ்த்திய மரணம்..!
சமீப காலமாக உடல்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது போன்று ஏற்பட்ட ஒருவரின் மரணம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படங்களில் வரும் அனைத்து காட்சிகளையும், பெரிய நடிகர்கள் நடிப்பது கிடையாது. அதிலும் குறிப்பாக சாகசம் நிறைந்த ஸ்டண்ட் காட்சிகள். மிகவும் ஆபத்தான காட்சிகளை, பொதுவாக அவர்களைப் போன்ற முகத்தோற்றம் கொண்டவர்கள் டூப்பாக நடிப்பது வழக்கம். அப்படி பாலிவுட்டில் நடிகர் சல்மான் கானுக்கு 50க்கும் மேற்பட்ட படங்களில் டூப்ளிகேட்டாக நடித்தவர் சாகர் பாண்டே. இதேபோன்று நடிகர் ஷாருக் கானுக்கு பிரசாந்த் வால்டே என்பவர் டூப்பாக நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: திரையுலகத்தில் அதிர்ச்சி..! 41 வயதில் பிரபல தமிழ் பட நடிகர் மாரடைப்பால் மரணம்.!
சாகர் பாண்டே நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனே அங்கிருந்தவர்கள் ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியில் இருக்கும் பாலா சாஹேப் தாக்கரே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதுவா? அதிரபோது பிக்பாஸ் வீடு!
இந்தத் தகவலை ஷாருக் கானுக்கு டூப் போடும் கலைஞர்களில் ஒருவரான பிரசாந்த் வால்டே தான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவல், சல்மான் கானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து உடல் பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயம் அதிகம் கவனம் பெற துவங்கியுள்ளது குறிபிடத்தக்கது.