MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் தாமரை செல்விக்கு அடித்த ஜாக்பாட்..! இந்த இருவரில் ஒருவருக்கு ஹீரோயினாக நடிக்கிறாரா? வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் தாமரை செல்விக்கு அடித்த ஜாக்பாட்..! இந்த இருவரில் ஒருவருக்கு ஹீரோயினாக நடிக்கிறாரா? வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான, தெருக்கூத்து கலைஞகர் தாமரை செல்வி, தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார். படப்பிடிப்பில் இருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 02 2022, 10:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடந்து முடித்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடியவர் தாமரை செல்வி. தனக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை மற்றும் கடன்கள் இருந்தும், பிக்பாஸ் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லாமல்... மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடியது இவர் மீது தனி மரியாதையை ஏற்படுத்தியது.
 

26

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வரும் போது, கள்ளக்கபடம் இல்லாமல் இவர் பேசியது... நடந்து கொண்ட விதம் போன்றவை இவர் நடிக்கிறாரோ என்கிற சந்தேகத்தை கூட வரவைத்து. எனவே இவர் வந்த வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார் என பலர் எதிர்பார்த்தனர்.

மேலும் செய்திகள்: கல்லூரி தேர்வுக்கு பணம் இல்லை... கலக்கத்தோடு உதவி கேட்ட மாணவி! சத்தமில்லாமல் உதவிய ஜி.வி.பிரகாஷ்!
 

36
bigg boss thamarai

bigg boss thamarai

ஆனால் அனைவரது நினைப்பையும் பொய்யாக்கி, பிக்பாஸ் விளையாட்டை கில்லி போல் விளையாடினார். அதே போல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவரது விளையாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

46

பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியே வந்த தாமரை, BB ஜோடிகள் நிகழ்ச்சியில்.. தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடனத்திறமையை வெளிக்காட்டி ஃபைனல் வரை வந்தார். ஒரு சில விஷயங்களால் இவரால் வெற்றி கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது.

மேலும் செய்திகள்: விக்ரம் மகன் துருவுக்கு ஜோடியாகிறாரா ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா..? உண்மையை உடைத்த தந்தை செல்வமணி!
 

56

இந்த நிலையில் பிக்பாஸ் தாமரைக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சினிமா வாய்ப்பை தட்டி தூக்கியுள்ளார்.  இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’திரைப்பட படப்பிடிப்பில்’ என்ற கேப்ஷனுடன் கூடிய இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் சிங்கம் புலி மற்றும் ரோபோ சங்கர் ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த இருவரில் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

66

ஒரு தெரு கூத்து கலைஞகராக அறியப்பட்டு, ரசிகர்களின் பேராதரவோடு  தற்போது வெள்ளித்திரை வாய்ப்பபை கைப்பற்றி திரைப்பட நடிகையாக மாறியுள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. விரைவில் இவர் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: 8 வருடத்திற்கு பின் கர்ப்பமான சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா..! வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சரவணனை சீண்டும் மீனா! பொறுமை இழக்கும் 'நல்ல பிள்ளை' - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் அடுத்து நடக்கும் அதிரடி ஆக்‌ஷன்!
Recommended image2
ஆதி குணசேகரன் ஆட்டம் குளோஸ்... கேன்சல் ஆன ஜாமின்; மீண்டும் சிறை - எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல்
Recommended image3
Toxic Postponed : துரந்தர் 2 உடன் மோத பயமா? டாக்ஸிக் ரிலீஸ் திடீரென தள்ளிவைப்பு - பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved