MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்ரம் மகன் துருவுக்கு ஜோடியாகிறாரா ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா..? உண்மையை உடைத்த தந்தை செல்வமணி!

விக்ரம் மகன் துருவுக்கு ஜோடியாகிறாரா ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா..? உண்மையை உடைத்த தந்தை செல்வமணி!

நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், உண்மை என்ன என்பதை உடைத்து கூறியுள்ளார் செல்வமணி. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 02 2022, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகமாகியுள்ள, நடிகர் விக்ரமின் மகன் துருவ் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட, 'ஆதித்ய வர்மா' படத்தில் நடித்தார். 2019-ம் ஆண்டு வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களோடு படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கில் வெற்றி பெற்ற  இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இல்லை என்பதே... இந்த படத்தின் தோல்விக்கு காரணம். எனினும் இந்த படத்தில் துருவ் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

25

இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'மகான்' படத்தில் தன்னுடைய தந்தை, விக்ரமுடன் சேர்ந்து நடித்திருந்தார். முதல் முறையாக விக்ரமுடன் நடித்தார் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் போனது.

மேலும் செய்திகள்: 8 வருடத்திற்கு பின் கர்ப்பமான சரவணன் மீனாட்சி ஸ்ரீஜா..! வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்!
 

35

எப்படியும் வெற்றி படத்தை கொடுத்து, தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும், துருவ் தற்போது பரியேறும் பெருமாள், கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.இரஞ்சித் தயாரிக்க உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் அவர் கபடி வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

45

இதை தொடர்ந்து துருவ் நேரடி தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான, ரோஜா ரோஜா செல்வமணியின் மகள் அன்ஷு மாலிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. 

மேலும் செய்திகள்: திரையுலகத்தில் அதிர்ச்சி..! 41 வயதில் பிரபல தமிழ் பட நடிகர் மாரடைப்பால் மரணம்.!
 

55

இந்நிலையில் இந்த தகவல் குறித்து தற்போது செல்வமணி விளக்கம் கொடுத்துள்ளார். தன்னுடைய மகள் அன்ஷு மாலிகா... மேற்படிப்பிற்காக தற்போது அமெரிக்கா சென்றுள்ளதாகவும், எனவே தன்னுடைய மகள் திரையுலகில் நடிக்க வருவதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார். ஒருவேளை நடிக்க வந்தால் கூட நான்கு வருடங்களுக்கு பிறகே நடிக்க வருவார் என இதன்மூலம் தெளிவு படுத்தியுள்ளார் செல்வமணி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் - ராஷ்மிகா திருமண நகைகளின் விலை இத்தனை கோடியா? 3 சொகுசு வில்லாக்களே வாங்கலாம்! மிரள வைக்கும் பின்னணி!
Recommended image2
கிரிக்கெட்டில் CSK-வையும்; தேர்தலில் TVK-வையும் யாராலும் தொட முடியாது - தவெக தலைவர் விஜய் பேச்சு
Recommended image3
சரவணனை சீண்டும் மீனா! பொறுமை இழக்கும் 'நல்ல பிள்ளை' - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் அடுத்து நடக்கும் அதிரடி ஆக்‌ஷன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved