இயற்க்கை பூங்காவை போல் படு பிரமாண்டமாக தயாராகி இருக்கும் பிக்பாஸ் சீசன் 6 வீடு..! வைரலாகும் புகைப்படம்!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக தயாராகி இருக்கும் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இந்த மாதம் (அக்டோபர்) 9 ஆம் தேதி துவங்க உள்ளது. இதனை பிக்பாஸ் தரப்பினரே அதிகார பூர்வமாக தெரிவித்து விட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் யார் யார்..? போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் நிலவி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது... அதன் பிறகு ஒளிபரப்பான 4 சீசன்களுக்குமே மிதமான வரவேற்பு மட்டுமே கிடைத்தது. எனவே இந்த முறை, எப்படியும் டி.ஆர்.பி-யை எகிற செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு போட்டியாளர்களை பார்த்து பார்த்து பிக்பாஸ் குழுவினர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் தாமரை செல்விக்கு அடித்த ஜாக்பாட்..! இந்த இருவரில் ஒருவருக்கு ஹீரோயினாக நடிக்கிறாரா? வைரல் புகைப்படம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியை கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் யார்... என்பது குறித்த சில தகவல்கள் யுகங்களின் அடிப்படியில் வெளியான போதிலும், இதுவரை அதிகார பூர்வமாக கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் ஒன்றாக தங்கி விளையாட உள்ள, பிக்பாஸ் வீடு படு பிரமாண்டமாக வடிவமைக்க பட்டுள்ளது. பார்ப்பதற்கு இயற்க்கை பூங்காவை போல் தோற்றமளிக்கும் பிக்பாஸ் சீசன் 6 வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. வீட்டின் உள்ளே... யானை, சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகளின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா ஐஸ்வர்யா ராய்? வயிற்றில் கைவைத்தபடி போஸ்.. சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்!