மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா ஐஸ்வர்யா ராய்? வயிற்றில் கைவைத்தபடி போஸ்.. சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்!
நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக, தொடர்ந்து சில செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் ரசிகர்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பல முறை, ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக... வதந்திகள் பரவியுள்ள நிலையில், மீண்டும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் காட்டு தீ போல், கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளத்தை வட்டமிட்டு வருகிறது.
கடந்த மாதம் 'பொன்னியின் செல்வன் 1' படத்தின் புரமோஷன் பணிகளுக்கு செல்வதற்காக மும்மை விமான நிலையம் வந்த ஐஸ்வர்யா ராய், கருப்பு நிற டீ - ஷர்ட், ஜீன்ஸ் மற்றும் அதன் மேல்... வெள்ளை நிற ஓவர் கோட் ஒன்றையும் அணிந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஐஸ்வர்யா ராய் வயிறு பெரிதாக இருப்பது போல் தெரிந்தது. எனவே ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவியது.
மேலும் செய்திகள்: மீண்டும் இணைந்த பொன்னியின் செல்வன் படக்குழு! மகளுடன் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா ராய்! போட்டோஸ்
இது குறித்து ஐஸ்வர்யா ராய் அதிகார பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிட வில்லை என்றாலும், நாளுக்கு நாள் இவர் கர்ப்பமாக இருப்பதாக எழுதப்படும் செய்திகளும், சந்தேகத்திற்கு இடம் தரும் வகையிலான புகைப்படங்களும் அதிகம் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா ராய், தன்னுடைய நடிப்பில் வெளியாகி இருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, மகள் ஆராத்யா மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து, சென்னையில் உள்ள சத்தியம் சினிமாஸில் பார்த்தார். அப்போது படக்குழுவை சேர்ந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டார். மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி ஐஸ்வர்யா ராய் வயிற்றில் கை வைத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராய் வயிற்று பெரிதாக இருப்பதை பார்க்க முடிகிறது.
மேலும் செய்திகள்: என்னடா இது 500 கோடில பொம்ம படம் எடுத்து வச்சிருக்கீங்க- பிரபாஸின் ஆதிபுருஷ் டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
ஏற்கனவே உடல் எடை கூடி காணப்படும் ஐஸ்வர்யா ராய்.. வயிறு பெரிதாக இருப்பது போல் இந்த புகைப்படத்தில் தெரிவதால், ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக எழுந்துள்ள சந்தேகம் அதிகரித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில்... விரைவில் இது இந்த சந்தேகங்களுக்கு ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து முற்று புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.