MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னடா இது 500 கோடில பொம்ம படம் எடுத்து வச்சிருக்கீங்க- பிரபாஸின் ஆதிபுருஷ் டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

என்னடா இது 500 கோடில பொம்ம படம் எடுத்து வச்சிருக்கீங்க- பிரபாஸின் ஆதிபுருஷ் டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

Adipurush : ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 03 2022, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாகுபலி படம் மூலம் உலகமெங்கும் பேமஸ் ஆனவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாஹோ மற்றும் ராதே ஷியாம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. இருப்பினும் அவர் அடுத்தடுத்து நடிக்கும் பிரம்மாண்ட படங்கள் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் இருந்து வந்தது.

24

அந்த வகையில் பிரபாஸ் கைவசம் தற்போது ஆதிபுருஷ், சலார், ஸ்பிரிட், புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஆதிபுருஷ் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக இப்படம் வெளிவர உள்ளது.

இதையும் படியுங்கள்... வந்து கொண்டிருக்கிறேன் அதர்மத்தை சர்வநாசமாக்க... ஸ்ரீ ராமராகவே மாறிய பிரபாஸ்! வெளியானது 'ஆதிபுருஷ்' டீசர்!

34

ஆதிபுருஷ் படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராமராக பிரபாஸும், சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக சையிஃப் அலிகானும் நடித்துள்ளனர்.

44

நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதற்காக ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த டீசர் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. அதற்கு காரணம் இந்த படம் மோஷன் கேப்சர் முறையில் எடுக்கபட்டுள்ளது தான். தமிழில் ரஜினியின் கோச்சடையான் படம் இவ்வாறு தான் எடுக்கப்பட்டு இருந்தது. ஆதிபுருஷ் டீசர் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்னடா இது 500 கோடில பொம்ம படம் எடுத்து வச்சிருக்கீங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... வெற்றிமாறன் கூறியபடி ராஜ ராஜ சோழன் இந்து கிடையாதா?... பின் எதற்காக சிவன் கோவிலை கட்டினார்? - உண்மை பின்னணி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Recommended image2
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image3
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved