'வாரிசு' படத்தில் நடிக்கவில்லை? ஷூட்டிங் ஸ்பாட் சென்றதற்கு இது தான் காரணமாம்..!
நடிகை குஷ்பூ 'வாரிசு' படத்தில் நடிக்கிறார் எங்கிற தகவல் வெளியான நிலையில், இந்த தகவலை தற்போது மறுத்துள்ளார் குஷ்பூ. மேலும் ஷூட்டிங் ஸ்பாட் சென்றதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
Vijay
தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.
varisu
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாக கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் படக்குழு, படப்பிடிப்பு தளத்திற்குள் இருக்கும் யாரும், படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கும் போது செல் போன் போன்றவை பயன்படுத்த கூடாது என நிபந்தனை விதித்து படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: உனக்கெல்லாம் படங்களை விமர்சிக்க தகுதியே இல்லை..! ப்ளூ சட்டை மாறனை நேரடியாக தாக்கி பேசிய இயக்குனர் பேரரசு!
varisu
மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பூ, விஜய்யுடன் இணைந்து 'வாரிசு' படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது. அதற்க்கு ஏற்றாற்போல் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய், பிரபு, சரத்குமாருடன் குஷ்பூ இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. தற்போது இதுகுறித்து குஷ்பூ விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிக்க வில்லையாம். படப்பிடிப்பில் விஜய்யை பார்க்க தான் சென்றதாக கூறியுள்ளார். அப்போது தான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த தன்னுடைய முன்னாள் கதாநாயகர்களான, பிரபு, சரத்குமார் போன்றவர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 'வாரிசு' படத்தில் குஷ்பூ நடிக்க வில்லை என்கிற தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் கேப்ரியல்லாவுடன் காதலா..? இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து உண்மையை உடைத்த ஆஜித்!