விரைவில் திருமணம்... காதலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஹரீஷ் கல்யாண்! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு அவரது பெற்றோர் திருமணத்திற்கு பெண் பார்த்து வருவதாக, ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஹரீஷ் கல்யாண். எனவே விரைவில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது.
நடிகை அமலாபால் நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். இந்த படத்தை தொடர்ந்து, 'அரிது அரிது', 'பொறியாளன்', 'வில் அம்பு' போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்த போதிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாத ஹீரோவாகவே இருந்தார்.
பின்னர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் திடீர் என வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சி இவரது சினிமா வாழ்க்கையையே புரட்டி போட்டது. ரசிகர்களின் ஆதரவோடு... 100 நாட்கள் உள்ளே இருந்த ஹரீஷ் கல்யாண் பைனல் வரை சென்று இரண்டாவது ரன்னர் அப்பாக வெளியேறினார்.
மேலும் செய்திகள்: மாலத்தீவில் ரொமான்ஸில் மல்லு கட்டும் ஷ்ரேயா - சித்து..! காதல் பொங்க... பொங்க... வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியை வந்து விட்டு வெளியே வந்ததும், பிக்பாஸ் ரைசாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'பியர் பிரேமா காதல்' திரைப்படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பின்னர் கவனிக்கப்பட கூடிய நடிகராக மாறிய ஹரீஷ் கல்யாண்... தொடர்ந்து மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான, 'இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு', 'ஓ மணப்பெண்ணே' போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
மேலும் செய்திகள்: ‘ஜென்டில்மேன் 2’ ஹீரோயின் நயன்தாரா... ஹீரோ யார் தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
சினிமா கேரியரில் நிலையான இடத்தை பிடித்து விட்டதால்... ஹரீஷ் கல்யாணுக்கு இவரது பெற்றோர் திருமணத்திற்கு தீவிரமாக பெண் பார்த்து வருவதாகவும், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இவரது திருமணம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில்... முதல் முறையாக தன்னுடைய காதலியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.
சமூக வலைத்தளத்தில் காதலியின் கையுடன் கை கோர்த்தபடி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ஒரு புதிய துவக்கம் என கூறியுள்ளார். எனவே விரைவில் இவரது திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹரீஷ் கல்யாண் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் யார்... என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும் ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல்களான மர்மதேசம், ஜீ பூம் பாவில் நடித்த பிரபலம் தற்கொலை - சோகத்தில் திரையுலகினர்