"மாஸ்டர்" படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம், முதல் அறிவிப்பாக காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி அன்று ''ஒரு குட்டி கத'' என்ற முதல் சிங்கிளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தனது படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடப்பு விஷயங்கள் குறித்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் விஜய், இம்முறை என்ன பேசப்போகிறார், வருமான வரித்துறையினரின் சோதனை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்தெல்லாம் அவர் பேசுவாரா? அதுதொடர்பான குட்டிக்கதை சொல்வாரா? என்ற ரசிகர்களின் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!

இப்படி ஒரு அறிவிப்பால் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கும் விஜய் ரசிகர்கள், அப்படத்தின் இசையமைப்பளாரான அனிருத் போட்ட ட்வீட்டால் செம்ம கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் யாருடைய குரலில் இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்...!

இந்நிலையில், இந்த பாடலை பாடப்போவது தளபதி விஜய் தான்னு, இசையமைப்பாளர் அனிருத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அத்துடன் விஜய் தன்னை கட்டிபிடித்திருப்பது போன்ற போட்டோவையும் பதிவிட்டுள்ளார். அப்பறம் என்ன விஜய் ரசிகர்கள் இப்பவே ட்விட் போட்டு கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க.