ஏ.ஆர்.முருகதாஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான தர்பார் திரைப்படம் கடந்த மாதம் 9ம் தேதி ரிலீஸானது. முதல் 4 நாட்கள் ரசிகர்கள் திருவிழா, அதனால் படம் தூள், அடி சக்க என கமெண்ட்டுகள் தீயாய் பரவியது. இதைக்கேட்டு ஆசை, ஆசையாய் தியேட்டர்களில் கூட்டம் குவிய ஆரம்பித்தது. லைகாவும் நாங்க 4 நாளிலேயே 150 கோடி வசூல் பண்ணிட்டோமே என டுவிட்டரில் கெத்து காட்டியது. இது எல்லாம் முதல் வாரம் மட்டும் தான்.

அடுத்தடுத்த நாட்களில் சோசியல் மீடியாவில் படத்தை பற்றி தாறுமாறு கமெண்ட்ஸ்கள் பறந்தன. தர்பார் படத்தில் ரஜினியி எங் லுக்கை பார்த்து வியந்த பலரும், கதை எங்கய்யா என்று தேட வேண்டிய நிலை உள்ளதாக புலம்பி தீர்த்தனர். அப்பவும் படம் சூப்பர் ஹிட் என்று ரசிகர்கள் பட்டாளம் ரகளை செய்து வந்தது. 

பொத்தி, பொத்தி வச்சாலும் பூனை குட்டி வெளியே வருவது போல், தர்பார் படத்தால் பலத்த நஷ்டம், இழப்பீடு தாங்கன்னு சொல்லி விநியோகஸ்தர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். சர்கார் பட வெற்றியை நம்பி, ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கன்டிஷனுக்கு எல்லாம் ஓ.கே. சொன்ன ரஜினிகாந்த் நொந்து போனார். 

இதையடுத்து விநியோகஸ்தர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு  ஏ.ஆர்.முருகதாஸ் கோர்ட் படியேற, விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தனர். அங்க தலைவர் யாரு, நம்ம டி.ஆரு. சும்மா விடுவாரா?... ஏ.ஆர்.முருகதாஸை பிரஸ் மீட்டில் கிழிகிழியென கிழித்தெடுத்தார். 

அப்போது கடைசியாக தர்பார் படத்திற்கு நீங்க வாங்குன சம்பளம் எவ்வளவு?, அடுத்த படத்துக்கு நீங்க அவ்வளவு சம்பளம் வாங்குவீங்களா? தோத்து போயிட்டீங்கன்னா, கரண்ட்டில் கைவைக்க சொல்லுவாங்க பார்த்துக்கோங்க என சரமாரியாக சாடினார். 

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜூன் நடிக்கவிருந்தார். சூப்பர் ஸ்டாரின் தர்பார் பட பிளாப்பை கேள்விப்பட்ட அவர், இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறாராம். டி.ஆர். கொடுத்த சாபம் லைட்டா ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சிடுச்சோ...!