கடந்து 14 ஆண்டுகளாக தென்னிந்திய ரசிகர்களை தன் அழகு, கவர்ச்சி மற்றும் நடிப்பின் மூலம் கட்டி வைத்திருக்கிறார் நயன்தாரா. அழகாக இருக்கும் நடிகைகள் சிலர் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள், கவர்ச்சி காட்டும் சில நடிகைகள் சரியாக நடிக்க மாட்டார்கள்.நயன் தனது திரை மற்றும் சொந்த வாழ்வில் பல துயரங்களை கடந்து வந்தும் கூட, இந்த மூன்றிலுமே டாப் கியரில் கொடி கட்டி பறக்கிறார். 

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

முன்னணி நடிகைகள் பட வாய்ப்பிற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் நிலையில், நீங்க வந்த மட்டும் போதும் என நயன்தாராவின் போட்டோஸைக் காண ரசிகர்கள் தவம் கிடந்தனர். சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த நயன்தாரா, தற்போது சமூல வலைத்தளங்களில் செம்ம ஆக்டீவாக இருக்கிறார். 

காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு டூர் போனாலும் சரி, கோவில், கோவிலாக ஆன்மீக பயணம் போனாலும் சரி சுட, சுட செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் பதிவேற்றிவிடுகிறார். அந்த புகைப்படங்கள் முரட்டு சிங்கிள்ஸை சூடேற்றினாலும், தாறுமாறு வைரலாகி விடுகிறது. 

தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் நயன்தாரா. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கிறார். 

இதையும் படிங்க: காதலியாகி டூயட் பாடத்துடிக்கும் அனிகா சுரேந்திரன்... போட்டோ போட்டு சான்ஸ் தேடி தீவிர வேட்டை..!

அப்படித்தான் விளம்பர படம் ஒன்றிற்காக வெள்ளை நிற புடவையில் நயன்தாரா கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலர் பந்தலுக்குள் சிம்மாசனம் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி கொடுத்து வருகின்றனர். அப்படி நயன் நச்சுன்னு கொடுத்த போஸ்களை பாருங்கள்...