பிகில், தர்பார் என்று தான் நினைத்த இரண்டு படங்களுமே பெரிதாக கைகொடுக்காத நிலையில், மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பை சிறப்பாக முடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக தலைவர் 168 படத்திற்கு தயாராகிவிட்டார். அதை முடித்துவிட்டு காதலர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளாராம். 

கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை. அதனால் நீண்ட நாட்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டு தரமான கதையை தயார் செய்துள்ளார். காத்துவாக்குல இரண்டு காதல் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

முழுக்க காதல் கலந்த காமெடி திரைப்படமான இதில் இரண்டு கதாநாயகிகளாம். ஒன்று நயன்தாரா, மற்றொரு கதாபாத்திரத்தில் முக்கியமான நடிகை ஒருவர் நடித்தால் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று நயன் யோசித்துள்ளார். சமீபத்தில் ஜானு படத்தின் ஹிட்டை கொண்டாடி வரும் சமந்தா அவரது நினைவுக்கு வந்துள்ளார். 

உடனே சமந்தாவிடம் பேசிய நயன்தாரா, இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க சம்மதம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் நம்ம மக்கள் செல்வன். கண்டிப்பா விஜய் சேதுபதிக்கு எங்கேயே மச்சம் இருக்கு பாஸ்...!