லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. அதன் பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால் பார்வையாளர்கள் கூட்டம் குறைவாகவே வந்தது. 

 

இதையும் படிங்க: லைட்டா தெரியும் இடை... காற்றில் பறக்கும் உடை... அழகு தேவதையாய் ஜொலிக்கும் ப்ரியா பவானி ஷங்கர்...!

இதனால் மாஸ்டர் வெளியீடு தள்ளிப்போன நிலையில், பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனிடையே தமிழக அரசும் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என அறிவித்தது. இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் தினமும் வெளியாகும் புரோமோ வீடியோக்களால் விஜய் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். 

 

இதையும் படிங்க: முட்டி வரையுள்ள குட்டை உடையில் அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்கள்... கூடும் கிளாமரால் குழப்பத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் கதைக்கு உரிமை கோரி படக் குழுவினர் சார்பில் டெல்லியில் உள்ள மத்திய அரசின் பதிப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இங்குள்ள திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கதையை பதிவு செய்யும் முறைதான் இருந்து வருகிறது. டெல்லியில் உள்ள பதிப்புரிமை அலுவலகத்தில் கதையை பதிவு செய்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.