தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். 

இதையும் படிங்க: மாஸ்டர் இசை வெளியீட்டு விழா??... ஜெபக்கூட்டமா?? சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர் பேச்சு...!

இந்நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக, வில்லன் விஜய் சேதுபதி என்ன பேசப்போகிறார் என்றும் பலர் காத்திருந்தனர். மேடையில் ஏறிய விஜய் சேதுபதி " ப்ர்ஸ்ட் போஸ்டர் ரெடி பண்ணும் பொது கூட,  விஜய் சார் தான் என் பெயரை போஸ்டர்ல போட சொன்னாராம் அதை கேட்டு ரொம்ப ஷாக் ஆனேன். செட்ல நான் கொஞ்சம் நிறைய பேசுவேன்.  விஜய் சார் கிட்ட ஒரு நாள் கேட்டேன் ஏன் சார் பேசவே மாட்டேங்குறீங்கனு?" ஒரு சொன்னாரு "நான் ஒரு அப்சர்வர் யார் சொன்னாலும் கேட்டுப்பேன்".

விஜய் சார் ரொம்ப க்யூட், ஸ்மார்ட், அவரு வெட்கப்படும் போது அவ்வளவு அழகா இருப்பார். இப்ப வெட்கப்படுறார் பாருங்க... ஒரு க்ளோஸ் அப் வைங்க என சொல்ல...கேமராக்கள் அனைத்தும் விஜய்யை பார்த்து திரும்பியது. அப்போது விஜய் சேதுபதி எதிர்பார்த்தது போலவே விஜய் வெட்க புன்னகை உதித்தார். 

அதை பார்த்த விஜய் சேதுபதி, ஒரு ஆம்பளையால் இன்னொரு ஆம்பளை வெட்கப்படுறது வரலாறு. இதை பார்த்துக்கோங்க என்று கூறினார். அப்போ அரங்கமே அதிர சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, விஜய் சார் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும், அது எவ்வளவுன்னு மாஸ்டர் ஷூட்டிங்கில நான் கொடுத்த முத்தத்திலேயே தெரிஞ்சிருக்கும் என்று கூறினார்.

இதையும் படிங்க: மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க வேண்டும்... அதற்குள் அடைக்க கூடாது... சிஏஏவை தாறுமாறாக விமர்சித்த விஜய்...!

 "இந்தப் படத்துல நான் தான் ஹீரோ. ஏன்னா அவருக்கு நான் வில்லன்னா, எனக்கு அவரும் வில்லன் தான" என்று ஒரு மாஸ் பன்ச் டையலாக்குடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.