தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த சம்பவம், விஜய்யின் குட்டி ஸ்டோரி. அதை கேட்பதற்காக தான் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்துகிடந்தனர். 

விழா மேடையில் பேசிய தளபதி விஜய், முதலில் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். காரணம் கடந்த முறை நடந்த ஆடியோ ரிலீஸ் பங்கஷனின் போது சில விரும்ப தகாத செயல்கள் நடைபெற்றன. அதனால் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்தார். அதற்கு தான் அந்த மன்னிப்பு. 

தனது ஒவ்வொரு படத்தின் ஆடியோ ரிலீஸின் போதும் நடிகர் விஜய், அப்போதைய கரண்ட் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து தெறிக்கவிடுவார். அதன்படி மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது என இந்தியாவின் தற்போதைய பிரச்சனையான சிஏஏ சட்டம் குறித்து விமர்சித்தார்.