தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசினார். அப்போது இந்த நாள் இனிய நாள், எனது தம்பி மற்றும் தளபதியுமான விஜய் அவர்களுக்கு நன்றி. நான் ஒரு நாள் விஜய்யிடம் ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டேன் அதனை ஞாபகம் வைத்து கொண்டு என்ன அழைத்தார்.

அப்போது அவர் பேசியதை கேட்ட போது தான் தெரிந்தது எந்த நிலைக்கு போனாலும், வந்த நிலையை மறக்காதவர் தளபதி என புகழ்ந்து தள்ளினார். எதைப் பற்றி கேட்டாலும் விஜய்யிடம் இருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக கிடைக்கும், அந்த அமைதி தான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்றார்.


 
தொடர்ந்து பேசிய அவர், தன் இந்த நிலைக்கு உயர காரணம் ஏசு திருச்சபை தான். அவர்கள் தான் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்று கூறினார். ஏற்கனவே நடிகர் விஜய் மீது மதமாற்றம் செய்வதாக வதந்தி பரவி வரும் நிலையில், ஒரு பிரம்மாண்ட விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளரும், விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ இப்படி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.