கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள, 'இந்தியன் 2' படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டிய நிலையில், அவரையே பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள்.
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான, 'இந்தியன் 2' திரைப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தை புகழ்ந்து பாராட்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போட்ட பதிவுக்கு, நெட்டிசன்கள் அவரையே கலாய்த்து தள்ளி வருகிறார்கள் .
ஷங்கர் - கமல் காம்பினேஷனில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் 'இந்தியன் 2'. காதல், காமெடி, செண்டிமெண்ட், தேச பற்று, ஆக்ஷன் என ஒரு பக்கா கமர்ஷியல் காம்பேக்ட்டாக வெளியான இந்த படத்தில், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் சேனாதிபதியாகவும், சந்துருவாகவும் நடித்திருந்தார்.

அதே போல் முக்கிய வேடத்தில் மனிஷா கொய்ராலா, செந்தில், கவுண்டமணி, கஸ்தூரி, சுகன்யா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு அதிகார பூர்வாங்க அறிவிக்கப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து... 2019-ஆம் ஆண்டு, இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து உயிரிழப்புடன் ஏற்பட்ட விபத்து, கொரோனா பிரச்சனை, போன்ற பல தடங்கல்கள் வந்த நிலையில் அவற்றை அனைத்தையும் கடந்து, ஒருவழியாக இந்தியன் 2 படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியான நிலையில், இப்படத்தை முந்தைய பாகத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். இப்படம் குறித்து வெளியான கலவையான விமர்சனங்கள் குறித்து இயக்குனர் ஷங்கர் கூறியபோது, முதல் பாகத்தில் பேசிய பிரச்சனைகளை விட இரண்டாம் பாகத்தில் பேசப்பட்டது மிகவும் முக்கியமானதாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களில் 100 கோடியை இப்படம் கடந்து விட்டாலும்.. பல திரையரங்குகளில் கூட்டம் இன்றி காணப்படுவதால், இப்படம் ஒரு வாரம் திரையரங்கில் தாக்கு பிடிப்பது கடினம் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்தியன் 2 படம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி போட்டுள்ள பதிவில், "இந்தியன்2 நமது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடிப்பு மீதான அர்ப்பணிப்பை காட்டுகிறது என கூறி இயக்குனர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
பார்த்திபனின் புதிய முயற்சிக்கு முன் தோற்று போனதா? ஷங்கரின் பிரமாண்டம்! இந்தியன் 2 & டீன்ஸ் பட வசூல் நிலவரம்!
இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள், லோகேஷ் சார் கிண்டல் பண்ணாதீங்க, ஜோக் அடிக்காதீர்கள் என லோகியையே தாறுமாறாக கமெண்ட் போட்டு கலாய்த்து வருகிறார்கள். கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தற்போது கூலி படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
