மணிரத்னத்தின் 'அஞ்சலி' பட பாதிப்பில் இருந்து வெளியே வர முடியாமல் நான் உருவாகின கதை லில்லி! இயக்குனர் சிவம்!

கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள " லில்லி " திரைப்படம் குழந்தைகளுக்கான முதல் பான் இந்தியா திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது.
 

Lilly is the first children film to be made as a Pan India film

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 'லில்லி' இந்த படத்தை கோபுரம் ஸ்டூடியோஸ் சார்பில், K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் பேபி நேஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா, ஆகியோர் நடித்துள்ளனர்.

Lilly is the first children film to be made as a Pan India film

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் சிரஞ்சீவி.! குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு படையெடுத்த பிரபலங்கள்.! போட்டோஸ்..!

இந்த படம் பற்றி இயக்குனர் சிவம் பேசியதாவது.....

இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குனர்கள் படம் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது ஆனால் குழந்தைகளை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள படம் இதுவாகத் தான் இருக்கும். இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெரியவர்கள் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதோடு நட்புனா என்ன, விட்டுக் கொடுத்தல்னா என்ன என்பதை உணர்வுபூர்வமாக எடுத்திருக்கிறோம்.

Lilly is the first children film to be made as a Pan India film

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நிச்சயம் கண்கலங்க வைக்கும். இத்தனை ஆண்டுகாலம் எனது சினிமா அனுபவத்தில் எத்தனையோ கதைகளை எழுதி வைத்திருக்கிறேன் ஆனால் என் முதல் படமாக இந்த குழந்தைகள் கதையைத்தான் எடுக்க வேண்டும், அவர்களது உணர்வுகளை அனைவருக்கும் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை எடுத்தேன்.

பிரபு தேவா மகளின் பெயர் இதுவா... குழந்தை பெயரை வைத்து நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் விளையாடுகிறாரா மாஸ்டர்?

இந்த கதையையை நான் உருவாக்க முக்கியப் காரணமே இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தான் ஏன்னா அஞ்சலி படம் பார்த்து இன்றுவரை என்னால் அந்த படத்திலிருந்து வெளியே  வரமுடியல அந்த பாதிப்பில்தான் இந்த கதையை உருவாக்கினேன். நிச்சயம் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல பெரியவர்களுக்குமான படம். இதுவரை ஹாலிவுட் சினிமாவில் மட்டும் தான் டைனோசரை பார்த்துவந்தோம் முதல் முறையாக இந்த படத்தில் டைனோசரை பயன்படுத்தி இருக்கிறோம், அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே வரும் அதை நீங்கள் திரையில் பார்க்கும் போது கதையோடு ஒன்றியிருக்கும். 

Lilly is the first children film to be made as a Pan India film

'வேட்டையாடு விளையாடு' ரீரிலீஸ் முதல் 'தலைநகரம் 2' வரை இந்த வாரம் திரைக்கு வரும் 8 படங்கள்! முழு விவரம் இதோ.!

இந்த படம் இம்மாதம் 30 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்... இப்படத்திற்கு ராஜ்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஆண்டோ பிரான்சிஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios