- Home
- Cinema
- 'வேட்டையாடு விளையாடு' ரீரிலீஸ் முதல் 'தலைநகரம் 2' வரை இந்த வாரம் திரைக்கு வரும் 8 படங்கள்! முழு விவரம் இதோ.!
'வேட்டையாடு விளையாடு' ரீரிலீஸ் முதல் 'தலைநகரம் 2' வரை இந்த வாரம் திரைக்கு வரும் 8 படங்கள்! முழு விவரம் இதோ.!
ஒவ்வொரு வாரமும், திரையரங்குகளில் 4 படங்களுக்கு மிகாமல் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் மட்டும், திரையரங்கில் மொத்தம் 8 படங்கள் வெளியாக உள்ளன. அந்த படங்கள் குறித்த முழு விவரங்கள் இதோ.

வேட்டையாடு விளையாடு:
உலக நாயகன் கமலஹாசன், நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேட்டையாடு விளையாடு'. இந்த படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்கி இருந்தார். கமாலினி முகர்ஜி, ஜோதிகா, ஆகியோர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் வெளியாகி சுமார் 18 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படம், டிஜிட்டல் வெர்ஷனின் மீண்டும் ரீ-ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பாபா படத்தின் ரீலீஸ் கலெக்ஷனின் தூள் கிளப்பிய நிலையில், வேட்டையாடு விளையாடு படத்திற்கும் இதே வரவேற்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே.
தலைநகரம் 2:
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி ஹீரோவாக நடித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'தலைநகரம்'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் துரை இயக்கி உள்ளார். இரண்டாம் பாகத்திலும் சுந்தர் சி-யே ஹீரோவாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தலைநகரம் படத்தின் முதல் பாகத்தில், மிகப்பெரிய பிளஸ் என்றால் அது, நாய் சேகராக நடித்திருந்த வடிவேலுவின் காமெடி தான். ஆனால் இரண்டாம் பாகம் வடிவேலு இல்லாமல் உருவாகியுள்ள நிலையில், எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
அழகிய கண்ணே:
திண்டுக்கல் லியோனியின் மகன் சிவகுமார் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோர் நாயகன் - நாயகியாக நடித்து, வெளியாக உள்ள திரைப்படம் 'அழகிய கண்ணே'. இந்த படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்துள்ளார். இயக்குனர் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மூலம் சிவகுமார் ரசிகர்கள் மனதில் ஒரு ஹீரோவாக இடம்பிடிப்பாரா?
நாயாடி:
கேரளாவில் வாழ்ந்து வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களின் கதையை அமானுஷ்ய கதைகளத்துடன் கூற வருகிறது நாயாடி திரைப்படம். இந்த படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுனராக பணிபுரிந்த வருமான ஆதர்ஷ் மதிகாந்தம் என்பவர் இயக்கி, தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக துணிவு படத்தில் நடித்திருந்த காதம்பரி நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.
பாயும் ஒளி நீ எனக்கு:
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்திற்கு சாகர் இசையமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவில், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். விக்ரம் பிரபு 'டாணாக்காரன்', 'பொன்னியின் செல்வன்', என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நிலையில், இந்த படத்தின் மூலம் ஹார்டிக் வெற்றியை பதிவு செய்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரெஜினா:
நடிகை சுனைனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ரெஜினா'. திரில்லர் பாணியில் உருவாகி உள்ள 'ரெஜினா' படத்தை சதீஷ் நாயர் இயக்கியுள்ளார். கமர்சியல் படங்களை விட கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்துவரும் சுனைனா, இந்த படத்தின் மூலம் வெற்றியை பதிவு செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தண்டட்டி
இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில், காமெடி கதை களத்தை முதன்மையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தண்டட்டி'. நடிகர் பசுபதி மற்றும் ரோகிணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.
அஸ்வின்ஸ்:
அறிமுக இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில், தரமணி பட நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் அஸ்வின்ஸ். திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தில், விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தரமணியில் தரமான வெற்றியை பதிவு செய்த வசந்த் ரவி... இந்த படத்திலும் தன்னுடைய வெற்றியை பதிவு செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
காட்டிக்கொடுத்த பார்த்திபன்! பொன்னியின் செல்வன் இன்கம் ரெய்டு மேட்டரை கூறி பகீர் கிளப்பிய பயில்வான்!