சிவகார்த்திகேயன் மகன் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே? பிள்ளையின் நடை அழகை வர்ணிக்கும் தந்தை! வைரல் புகைப்படம்!
சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய மகன் குகனின் நடை அழகை வர்ணிக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
முன்னணி நடிகர் - நடிகைகளின் மகன் மற்றும் மகள்களே வந்த வேகத்தில் திரையுலகில் இருந்து காணாமல் போகும் நிலையில், எந்த விதமான சினிமா பின்னணியும் இன்றி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.
பொதுவாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, சாதிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. விட முயற்சியும், போராடும் குணமும் இருந்தால் மட்டுமே வாய்ப்புகள் வசப்படும். அப்படி வசப்படும் வாய்ப்புகளை வெற்றியாக மாற்றும் வித்தகராகவும் இருக்க வேண்டும்.
இந்தியன் 2 படக்குழுவினர் என்னை கொன்று விடுவார்கள்! பிறந்த நாள் அதுவுமா காஜல் சொன்ன வார்த்தை..!
அப்படி தனக்கான படிகளை தானே செதுக்கி கொண்டு ஏறத்துவங்கிய சிவகார்த்திகேயனை, பின்னர் மக்களே வெற்றி நாயகன் என்கிற பட்டத்தை கொடுத்து, தற்போது டாப் நடிகர்கள் பட்டியலில் ஏற்றி அழகு பார்த்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்து காமெடி கலந்த ஹீரோவாக நடித்த சிவகார்த்திகேயன், சமீப காலமாக ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு ரூ.100 கோடிக்கு மேல் கலெக்ஷனையும் அள்ளியது.
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ள 'மாவீரன்' திரைப்படம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்க கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது. காரணம் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக விருமன் பட நாயகி அதிதி ஷங்கர் நடிக்கிறார். அதேபோல் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்
இப்படத்தை மண்டேலா படத்துக்காக இரண்டு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடந்து இந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமான 'அயலான்' படமும் வெளியாக உள்ளது.
இவரின் படம் குறித்த அப்டேட் மட்டுமே அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய மகனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு... நீ நடந்தால் நடை அழகு என்கிற கேப்ஷனையும் போட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் மகன் குகனை பார்த்து ரசிகர்கள் பலர், இவ்வளவு பெருசாக வளர்ந்து விட்டாரா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி எழுப்பி வருவது மட்டும் இன்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.